அன்றே எச்சரித்த அதிரை பிறை.. இன்று இஸ்லாமிய வெறுப்பை கக்கிய சீமான்! நாம் தமிழர் கட்சியினர் திருந்துவார்களா?

Editorial
0
நாம் தமிழர் கட்சி, அதன் ஒருங்கிணைப்பாளர் சீமானின் இஸ்லாமிய விரோத போக்கு மற்றும் அவர்களின் அபாயகரமான பின்னணி பற்றி இஸ்லாமிய இயக்கங்களே பேசாதபோது, அதிரை இளைஞர்கள் வழிதவறி செல்லக்கூடாது என்ற நோக்கில் பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் 3 ஆண்டுகளுக்கும் முன்பே அதிரை பிறை அவர்களை தொடர்ந்து அம்பலப்படுத்தி வந்தது.

இதன் காரணமாக நிறைய மிரட்டல்கள், மன உளைச்சல்கள், துன்புறுத்தல்களை நாம் சந்தித்தோம். ஆனால், அதன் பயனாக பலர் உணர்ந்து கட்சியிலிருந்து விலகினார்கள். நாதகவில் இணைய விரும்பிய அதிரை இளைஞர்கள் பின்வாங்கினார்கள். சீமான் பெருமை பேசிய இளைஞர்கள் உண்மையை உணர்ந்தார்கள். அதிரையில் அக்கட்சியின் தீவிரமும் குறைந்து உள்ளாட்சித் தேர்தலில் படுதோல்வியை தழுவியது.

இன்று சீமான் இஸ்லாமியர்களையும் கிறிஸ்துவர்களையும் சாத்தானின் பிள்ளைகளாக மாறிவிட்டார்கள். அநீதி, அக்கிரமங்களுக்கு அவர்களே பொறுப்பு என்று ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிபோல் பேசி இருக்கிறார்.

இதை பார்த்து காலையில் இருந்தே நமதுக்கு போன் கால்கள், மெசேஜ்கள் வருகின்றன. அன்றே நீங்கள் சொன்னீர்கள் என்று. உணர்ந்தவரை மகிழ்ச்சி. அப்போது நம்மை திட்டியவர்கள் இன்று அதிரை பிறையை வாழ்த்துகின்றனர்.

நாம் தமிழர் குறித்து அதிரை பிறை அன்றே வெளியிட்ட கட்டுரைகள் மற்றும் செய்திகள்

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...