அதிரை தமுமுக - மமக நகர தலைவராக சையது புகாரி தேர்வு

Editorial
0
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி ஒருங்கிணைந்த அதிராம்பட்டினம் நகர பொதுக்குழு கூட்டம் திங்கள்கிழமை 31/07/2023 அன்று மாலை 7:30 அளவில் நகர அலுவலகத்தில் ஏ.முகமது இலியாஸ், மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் தலைமையில் நடைபெற்றது. 
மாவட்ட பொறுப்பு குழு தலைவர் அப்துல் மாலிக், பொறுப்பு குழு உறுப்பினர்கள் எஸ்.எம். ஏ.சாகுல் ஹமீத் மற்றும் எம்.செக் ராவுத்தர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் எஸ்.ஏ.இத்ரீஸ் அஹமத் வரவேற்புரை ஆற்றினார். 
தேர்தல் அதிகாரி வழக்கறிஞர் எல்.தீன் முஹம்மது ( மாநிலச் செயலாளர் மக்கள் உரிமை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அணி) தேர்தல் நடத்தி வைத்தார். மனிதநேய மக்கள் கட்சியினுடைய மாநில துணைப் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் ஐ.எம் பாதுஷா சிறப்புரை ஆற்றினார்.
இதில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனித நேய மக்கள் கட்சியின்  நகரத் தலைவராக ஹச்.சையது புகாரி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினுடைய நகர செயலாளராக முனைவர். ஹச்.ஷேக் அப்துல் காதர் , மனிதநேய மக்கள் கட்சியின் நகர செயலாளராக எஸ்.முகமது அஸ்லம், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியினுடைய நகர பொருளாளராக ஆர்.எம்.நைனா முகம்மது தேர்வு செய்யப்பட்டனர். இறுதியாக நகரத் தலைவர் ஹச்.சையது புகாரி நன்றி உரையாற்றினார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...