அதிரை திமுகவுக்கு தர்மசங்கடம்.. ARDA நில பிரச்சனையில் கூட்டணி என்றும் பாராமல் கண்டன தீர்மானம் நிறைவேற்றிய தமுமுக - மமக

Editorial
0
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி ஒருங்கிணைந்த அதிராம்பட்டினம் நகர பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. 

மனிதநேய மக்கள் கட்சியினுடைய மாநில துணைப் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் ஐ.எம் பாதுஷா சிறப்புரை ஆற்றினார். இதில் புதிய நிர்வாகிகள் தீர்வு செய்யப்பட்டு பின் வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1. மத சுதந்திரத்தைப் பறிக்கும் வகையில் ஒன்றிய அரசு கொண்டுவரும் அரசியல் அமைப்புக்கு எதிரான பொது சிவில் சட்டத்தை கண்டிக்கின்றோம்.
2. மணிப்பூர் பற்றி எரிய காரணமானவர்களையும் பழங்குடி பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்தவர்களையும் மற்றும் பாஜக அரசை இந்த பொது குழு வன்மையாக கண்டிக்கின்றது.
3. நீண்ட நாள் ஆயுள் சிறைவாசிகள் மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டுகிறோம்.
4. ARDA நில விவகாரத்தில் தலையிடும் அரசியல் சக்திகளை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
5. குழந்தை பிறப்பு குறித்து பதிவு செய்வதற்காக PICMI எண் பெறுவதற்கு அதிரை கர்ப்பிணிகள் தற்போது ராஜாமடம் ஆரம்ப சுகாதார நிலையம் செல்ல வேண்டி இருக்கும் நிலையில் அந்த வசதியினை அதிரை அரசு மருத்துவமனையில் வழங்கிட வலியுருத்தப்படுகிறது.
6. அதிரை அரசு மருத்துவமனைக்கு 24 மணி நேரம் பணியாற்றிட மருத்துவரை விரைவில் நியமிக்க வேண்டும் மற்றும் அதிரை அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்பட வேண்டும்.
7. அதிராம்பட்டினத்தை விரைவாக தாலுக்காவாக அரசு அறிவிக்க வேண்டும் என்று இப்பொதுக் குழு வாயிலாக வலியுறுத்கின்றோம்.
8. தொடர்ந்து பல வருடங்களாக இயங்கி வந்த தமுமுக ஆம்புலன்ஸை மாற்றி தற்போது புதிய ஆம்புலன்ஸ் வாங்க தீர்மானனிக்கப்படுகிறது. 
9. ரயில் சேவையை அதிரை மார்க்கத்தில் அதிகரிக்க வேண்டும் மற்றும் தாம்பரம் - செங்கோட்டை ரயில் அதிராம்பட்டினத்தில் நின்று செல்ல வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.
10. 24வது வார்டு அடிப்படை வசதிகளை விரைந்து செயல்படுத்திட வேண்டும்.
11. அதிரையை குப்பையில்லா நகரமாக மாற்றி சுகாதாரத்தை மேன்மை படுத்த வேண்டும்.
12. அதிரையில் நிலவும் தொடர் மின்தடையை சரி செய்து விரைந்து தடையில்லா மின் சேவை வழங்க வலியுறுத்தப்படுகிறது.
13. விபத்துகளை ஏற்படுத்தும் விதமாக சாலையில் சுற்றித்திரியும் நாய், ஆடு, மாடு போன்ற கால்நடைகளை  நகராட்சி நிர்வாகம் கட்டுப்படுத்த வேண்டும்.
14. அதிராம்பட்டினம் நகராட்சி வளர்ந்து வரும் நிலையில், இங்கு பெட்ரோல் பங்குகள், கேஸ் ஏஜென்ஸி, பள்ளிகள், கல்லூரி அமைந்துள்ளது. மேலும், உணவகங்கள், திருமண மண்டபங்கள்  போன்றவற்றிற்கும் பொதுமக்கள் பயான்பாட்டிற்கும் சுமார் 15 ஆயிரத்திற்கும் மேல் கேஸ் இணைப்புகள் நகரம் முழுவதும் இருப்பதினால் எதிர்பாராத தீ விபத்துக்களை தடுப்பதற்கு அரசு தீயணைப்பு நிலையம் அமைத்து தரவேண்டும்.
15. அதிராம்பட்டினத்தில் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பாக பனிமனை அமைக்க வேண்டி வலியுறுத்தப்படுகிறது. மேலும், கண் சிகிச்சைக்காக அதிராம்பட்டின பொதுமக்கள் மதுரை செல்ல வசதியாக அதிராம்பட்டினத்திலிருந்து நேரடியாக மதுரைக்கு பேருந்து இயக்க வேண்டி வலியுறுத்தப்படுகிறது.

இதில் ARDA நில விவகாரத்தில் திமுகவை சேர்ந்த நகராட்சி துணைத் தலைவர் குணசேகரன் தலையீடு இருப்பதாகவே ARDA குற்றம்சாட்டுகிறது. இந்த நிலையில் அதன் கூட்டணியில் உள்ள மமகவே கண்டன தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது குறிப்பிடத்தது.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...