மூனு, நாலு, ஏழு - இதுதான் அதிரையில் நாம் தமிழர் வாங்கிய ஓட்டுக்கள்

Editorial
0
அதிரை உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்துள்ளது. இதில் திமுக 19 இடங்களில் வெற்றிபெற்று நகராட்சியை கைப்பற்றியுள்ளது. அதிமுக 2 வார்டுகளிலும், சுயேட்சை 2 வார்டுகளிலும் SDPI, CPI, முஸ்லீம் லீக், பாஜக தலா ஒரு வார்டில் வென்றுள்ளனர்.

இதில் போட்டியிட்ட பெரும்பாலான கட்சிகள் ஒரு சில வார்டுகளிலாவது 2 வது இடத்தையோ அல்லது குறிப்பிடத்தகுந்த வாக்குகளையோ வென்றனர். ஆனால், நாம் தமிழர் கட்சி அதிரையில் மிக மிக மோசமான தோல்வியை சந்தித்து இருக்கிறது.

6 மற்றும் 9வது வார்டுகளில் நாம் தமிழர் பெற்ற வாக்கு எண்ணிக்கை வெறும் 3 மட்டுமே. 5வது வார்டில் அக்கட்சி 4 வாக்குகள், 10வது வார்டில் 6 வாக்குகள், 12 வது வார்டில் 7 வாக்குகள் என ஒற்றை இலக்கத்தில் வாக்குகளை பெற்று படுதோல்வியை சந்தித்து இருக்கிறது.

மற்ற வார்டுகளிலாவது ஓரளவுக்கு வாக்குகளை பெற்றுள்ளதா என்றால் அதுவும் இல்லை. 8வது வார்டில் 12, 20வது வார்டில் 13, 27வது வார்டில் 15, 26வது வார்டில் 17 என யாருமே 20 வாக்குகளை கூட தாண்டவில்லை. ஆக மொத்தம் நாம் தமிழர் கட்சி 9 இடங்களில் போட்டியிட்டு மொத்தமே 80 வாக்குகளையே பெற்றுள்ளது.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...