அதிரை SISYAவின் அசத்தல் முயற்சி.. பொதுசிவில் சட்டத்துக்கு ஒரே கிளிக்கில் எதிர்ப்பு தெரிவிக்கலாம்

Editorial
6
பொது சிவில் சட்டத்திற்கான பணிகளை தொடங்கி இருக்கும் மத்திய அரசு இது தொடர்பாக மக்களிடம் ஆன்லைனில் கருத்து கேட்டு வரும் நிலையில், அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்கம் இளைஞர் அமைப்பு சார்பில் ஒரே கிளிக்கில் மெயில் அனுப்பும் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது.

பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்பட்டால் திருமணம், விவாகரத்து, சொத்துரிமை உள்ளிட்டவற்றில் இஸ்லாமியர்கள் பின்பற்றிவரும் ஷரீஅத் சட்டம் ஒழிக்கப்பட்டு பொது சட்டம் வரும்.

பொது சிவில் சட்டம் குறித்து பொது மக்களிடம் இருந்தும் பதிவு செய்யப்பட்ட மத அமைப்புகளிடமிருந்தும் மத்திய சட்ட ஆணையம் கருத்து கேட்டிருக்கிறது. அதை ஒரு மாதத்துக்குள் (14.07.2023) அனுப்ப வேண்டும் என கூறியிருப்பதையும் தாங்கள் அறிவீர்கள். 

இது தொடர்பாக நமது கடமையை ஆற்றுவது மிக அவசியம் ஆகும். எனவே இது தொடர்பாக பொதுமக்கள் கருத்து தெரிவிப்பதற்கு மெயில் ஐடி இணைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஷம்சுல் இஸ்லாம் சங்கம் இளைஞர் அமைப்பு சார்பில் ஒரு கிளிக்கில் மெயில் அனுப்பும் வசதி தொடங்கப்பட்டு உள்ளது.

மேலே உள்ள SUBMIT பட்டனை கிளிக் செய்தால் நேரடியாக உங்கள் ஜிமெயில் ஓபன் ஆகும். அதில் SEND பட்டனை அழுத்தினால் மெயில் சென்றுவிடும். 

Post a Comment

6Comments
  1. மாஷா அல்லாஹ் மெய்யாகவே இது அசத்தல் முயற்சி தான்

    ReplyDelete
  2. Working well. I have pointed out serial number in an order and finally I have added - Regards, my name and sent. Thanks a lot

    ReplyDelete
Post a Comment
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...