அதிரை இமாம் ஷாபி பழைய பள்ளி சுவர் இடிப்பு.. நகராட்சி மீது காவல் நிலையத்தில் புகார்

Editorial
0

Ads: Crescent builders - Coming Soon


மாவட்ட ஆட்சியரின் உத்தரவை மீறி அதிரை இமாம் ஷாபி பழைய பள்ளியின் சுவற்றை நகராட்சி ஊழியர்கள் இடித்து விட்டதாக பள்ளி நிர்வாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இதுகுறித்து பள்ளியின் நிர்வாக அலுவலர் அதிரை காவல் ஆய்வாளருக்கு எழுதியுள்ள புகார் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, "கடந்த ஜனவரி மாதம் அதிராம்பட்டினம் நகராட்சி நிர்வாகத்தால் பிள்ளையார் கோவில் தெருவிலுள்ள எங்கள் பள்ளி சீல் வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையை தொடர்ந்து, இருதரப்பும் தற்போதைய நிலையில் தொடர்வது என்றும் நகராட்சி நிர்வாகம் சீலினை அகற்றி கொள்வது என்றும் முடிவெடுக்கப்பட்டது.

மேலும் சென்ற 15.05.2024 பெய்த கனமழை காரணமாக மேற்படி எங்கள் பள்ளியின் அலுவலக சுவர் இடிந்து விட்டது. இதன் காரணமாக அலுவலகத்திலுள்ள பதிவேடுகள், ஆவணங்கள், புத்தகங்கள் மற்றும் மின்சாதன பொருட்கள் ஆகியவற்றிற்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து 16.05.2024 அன்று பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் ஆகியோருக்கு மனு அளித்திருந்தோம்.

இந்நிலையில், இன்று 17.05.2024 காலை மேற்படி ஸ்தலத்திற்கு வந்த அதிராம்பட்டினம் நகராட்சி ஊழியர்கள் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் சிலரும் மாவட்ட ஆட்சியர் அவர்களின் உத்தரவை மீறி பள்ளியின் வடபுறத்தில் இருந்த சுற்றுச்சுவரை இடித்துவிட்டு வடிகால் அமைக்கும் பணிகளை துவக்கியுள்ளனர். தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் இருக்கும் நிலையில் மன்ற உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியரின் உத்தரவையும் மீறி மேற்படி எங்கள் பள்ளியின் சுற்றுச்சுவரை இடித்து அதிலுள்ள பொருட்கள், ஆவணங்கள் மற்றும் பொருட்களுக்கு பாதுகாப்பற்ற சூழலை ஏற்படுத்தியுள்ளனர்.

ஆகவே சமூகம் ஐயா அவர்கள் இது விஷயத்தில் தலையிட்டு தக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...