அதிரையில் சிறப்பாக நடைபெற்ற YOUTH MILAN இளைஞர் சந்திப்பு.. பரிசுகளால் நெகிழ்ந்த பெற்றோர், மாணவர்கள்

Editorial
0
அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்கம் இளைஞர் அமைப்பு சார்பில் ஹஜ் பெருநாள் மறுநாளான நேற்று "யூத் மிலன்" என்ற பெயரில் சிறுவர் சிறுமிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.
10 வயதிற்குட்பட்ட சிறுவர்கள், 8 வயதிற்குட்பட்ட சிறுமியர்கள் என நூற்றுக்கும் அதிகமானோர் இதில் பங்கேற்றனர். ஓட்டப்பந்தயம், கயிறு இழுத்தல், ஸ்லோ சைக்கிள் ரேஸ், லெமன் இன் தி ஸ்பூன், பிஸ்கட் கடித்தல், தண்ணீர் நிரப்புதல், இன் அண்ட் அவுட் ஆகிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.
இறுதியாக போட்டியில் கலந்துகொண்ட அனைத்து மாணவ மாணவிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. அதை தொடர்ந்து இன்று அனைத்து முஹல்லா இளைஞர்களுக்கான யூத் மிலன் நிகழ்ச்சி மற்றும் விளையாட்டு போட்டிகளில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
ஷம்சுல் இஸ்லாம் சங்க தலைவர் முஹம்மது சாலிஹ் தலைமையில் ஷம்சுல் இஸ்லாம் சங்க துணைத் தலைவர் சர்புத்தீன் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் முத்துப்பேட்டை புதுப்பள்ளிவாசல் பெண்கள் இஸ்லாமிய கல்லூரி முதல்வர் எழுத்தாளர் இப்றாஹிம் அன்சாரி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.
இளைஞர்கள் ஒழுக்கமாகவும் ஒற்றுமையாகவும் இருக்க வேண்டியதன் அவசியத்தை பற்றி விரிவாக விளக்கிய இப்றாஹிம் அன்சாரி அவர்கள், போதைப் பொருள், செல்போனுக்கு இளைய சமுதாயம் அடிமையாவது, இஸ்லாமிய சமுதாயத்தை குறி வைத்து நடக்கும் போதைப் பொருள் விற்பனை போன்றவை குறித்து பேசினார்கள்.
அறிமுக உரையை சம்சுல் இஸ்லாம் சங்க இளைஞர் அமைப்பின் தலைவர் வழக்கறிஞர் முஹம்மது தம்பி நிகழ்த்தினார்கள். இறுதியாக நேற்றைய தினம் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. காதிர் முஹைதீன் கல்லூரி பேராசிரியர் ஹாஜா அவர்கள் நன்றியுரையாற்றினார்கள்.





Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...