அதிரையில் ஜும்மா தொழுகைக்கு பின் சிஸ்யா சார்பில் பொதுசிவில் சட்டத்தை எதிர்த்து மெயில் அனுப்பும் முகாம்

Editorial
0
இந்து, முஸ்லிம், கிறிஸ்தவம், சீக்கியம், ஜெயின் உள்ளிட்ட பல்வேறு மதத்தினர் அவரவர் மதத்தின் அடிப்படையில் பின்பற்றி வரும் சிறப்பு சட்டங்களை மாற்றி அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டத்தினை கொண்டு வர மத்திய அரசு முயற்சித்து வருகிறது.

இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டால் திருமணம், விவாகரத்து, சொத்துரிமை உள்ளிட்டவற்றில் முஸ்லிம்கள் பின்பற்றிவரும் ஷரீஅத் சட்டம் ஒழிக்கப்பட்டு பொது சட்டம் வரும். அல்லாஹ்வின் கட்டளையின்படி முஹம்மது நபி(ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழியில் நாம் வாழ முடியாத அபாய நிலை உண்டாகும்.

இந்த சட்டம் குறித்து பொது மக்கள் மற்றும் பதிவு செய்யப்பட்ட மத அமைப்புகளிடம் இருந்து மத்திய சட்ட ஆணையம் கருத்து கேட்டு இருக்கிறது. அதை ஜூலை 14 க்குள் அனுப்ப கால அவகாசம் விதிக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த ஜமாத்துல் உலமா சபை, தமுமுக, எஸ்டிபிஐ உள்ளிட்ட அமைப்புகள் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளன.

அந்த வகையில் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் உள்ள ஜமாத்துகளில் ஒன்றான ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் இளைஞர் அமைப்பு சார்பில் ஒரு கிளிக்கில் பொது சிவில் சட்டத்துக்கு எதிராக மெயில் அனுப்பும் வசதி தொடங்கப்பட்டு உள்ளது.

இது அறிமுகம் செய்யப்பட்ட 4 நாட்களுக்குள் பல்வேறு ஊர்கள், மதங்களை சேர்ந்த 35 ஆயிரம் பேர் இச்சட்டத்துக்கு எதிராக இந்த தளம் மூலம் மெயில் செய்துள்ளார்கள்.

இந்த நிலையில் அனைத்து மசூதிகளிலும் இதற்கு கியூ ஆர் கோடு மூலம் எதிர்ப்பு தெரிவிக்க சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். இந்த நிலையில் இன்று வெள்ளிக்கிழமை சிறப்புத் தொழுகை முடிந்த பிறகு ஷம்சுல் இஸ்லாம் சங்கம் இளைஞர் அமைப்பு சார்பில் கியூ ஆர் கோடு பேனர் மூலம் பொது சிவில் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மெயில் அனுப்பும் முகாமும் ஏற்பாடு செய்யப்பட்டது. 

அந்த கியூ ஆர் கோடை செல்போனில் ஸ்கேன் செய்வதன் மூலம் ஒரு கிளிக்கில் மெயில் அனுப்ப முடியும். இதில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு பொது சிவில் சட்டத்துக்கு எதிராக மெயில் அனுப்பினர்.

நீங்கள் மெயில் அனுப்ப கீழே உள்ள SUBMIT பட்டனை அழுத்துங்கள்Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...