அதிரை மக்களே... ஓட்டு கேட்டு வரும் திமுகவினரிடம் இதை சொல்லுங்க

Editorial
0


தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற உள்ளது. அந்த வகையில் திமுக சார்பில் பட்டுக்கோட்டை வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ கா.அண்ணாதுரை நிறுத்தப்பட்டுள்ளார். திமுக சார்பில் வெளியான தேர்தல் அறிக்கையில், அதிரைக்கான பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதில், ஒன்று தான் அதிராம்பட்டினத்தில் காஸ்டிக் சோடா தொழிற்சாலை அமைக்கப்படும் என்ற வாக்குறுதி. கடந்த 2016 தேர்தலின்போதும் இதே வாக்குறுதியை திமுக அளித்திருந்தது. இந்த தொழிற்சாலையினால் ஏற்படவிருக்கும் பாதிப்புகள் குறித்து நமது அதிரை பிறையில் செய்தியாக வெளியிட்டிருந்தோம். இந்த தொழிற்சாலையால் புற்றுநோய்கூட ஏற்படலாம் என பூவுலகின் நண்பர்கள் ஆய்வுக்கட்டுரை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து அண்மையில் நாம் வெளியிட்ட பதிவின் லிங்க் இதோ: https://www.adiraipirai.com/2021/03/blog-post_49.html

தற்போது உங்கள் நிறுவனங்கள், பள்ளிவாசல்கள், வீடுகளை தேடி வாக்கு சேகரித்து வரும் திமுகவினருடமும், வாக்கு சேகரிக்க வரும் திமுக வேட்பாளரிடமும் இந்த தொழிற்சாலையை அதிரையில் அமைக்கக்கூடாது என்று சொல்லுங்கள். அனைத்து தரப்பிலும் அழுத்தங்கள் கொடுத்தால் அவர்கள் இதை கைவிடும் நிலைக்கு தள்ளப்படுவார்கள். இதை நாம் கண்டுகொள்ளாவிட்டால் ஸ்டெர்லைட்டால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடியை போல், காஸ்டிக் சோடாவால் பாதிக்கப்பட்ட காயல்பட்டினத்தை போல் நாளை நமதூரும் மாறலாம்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...