அதிரை மாற்றுத்திறனாளிகள் திமுக வேட்பாளரிடம் கோரிக்கை

Editorial
0
அதிரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியை சேர்ந்த மாற்றுதிறனாளிகள் பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கா.அண்ணாதுரை அவர்களை இன்று சந்தித்து தங்கள் கோரிக்கைகளை முன் வைத்தனர்.

வருகின்ற தேர்தலில் வெற்றிபெற்றால் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவி தொகை ரூ.1500ஐ  ரூ.3000ஆக உயர்த்தி வழங்க வேண்டியும், அரசு வேலை கிடைக்கவும் அவர்கள் வலியுறுத்தினர்.


தேர்தலில் வெற்றிபெற்றால் கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக கா.அண்ணாதுரை அவர்கள் வாக்குறுதி அளித்தார்.இந்நிகழ்வில் அதிரை மாற்றுத்திறனாளிகள் சங்கத்தலைவர் ஜம் ஜம் அஷ்ரப், மாவட்ட தலைவர் பஹத், நகர பொருளாளர் ஜலீல் உட்பட பல மாற்று திறனாளிகள் கலந்து கொண்டனர்.


Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...