அதிரையில் நின்று செல்லும் சென்னை நெல்லை ரயில்.. மீண்டும் வருகிறது - நேர அட்டவணை

Editorial
0
Ads: Crescent builders - Coming Soon
கோடை விடுமுறை நெரிசலை தவிர்க்க திருநெல்வேலியிலிருந்து சென்னை எழும்பூருக்கு தெற்கு ரயில்வே சிறப்பு விரைவு ரயிலை காரைக்குடி - பட்டுக்கோட்டை - திருவாரூர் ரயில் தடத்தில் இயக்குகிறது. 

திருநெல்வேலி - சென்னை எழும்பூர் - திருநெல்வேலி கோடைகால சிறப்பு விரைவு ரயில் (வண்டி எண் 06070) ஏப்ரல் மாதம் 11, 18, 25, மே மாதம் 29,16, 23, 30 ஆகிய தேதிகளில் வியாழக்கிழமை மாலை 06 .45 மணிக்கு திருநெல்வேலியிலிருந்து புறப்பட்டு கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை,  கல்லல், காரைக்குடி,  அறந்தாங்கி, பேராவூரணி வழியாக பட்டுக்கோட்டைக்கு வியாழன் இரவு 11:53 மணிக்கு வருகிறது. தொடர்ந்து அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி, திருவாரூர், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், கடலூர் துறைமுகம் ,விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் வழியாக வெள்ளிக்கிழமை காலை 8:30 மணிக்கு சென்னை எழும்பூரை சென்றடையும்.


மீண்டும்  இந்த ரயில் (வண்டி எண் 06069)சென்னை எழும்பூரில் இருந்து  ஏப்ரல் மாதம் 12, 19, 26 மே மாதம் 3, 10 ,17, 24, 31ஆம் தேதிகளில் வெள்ளிக்கிழமை பகல் 03.00 மணிக்கு  புறப்பட்டு இதே மார்க்கத்தில் பட்டுக்கோட்டைக்கு இரவு 11:13 மணிக்கு வந்தடைந்து தொடர்ந்து திருநெல்வேலிக்கு சனிக்கிழமை காலை 07.10 மணிக்கு சென்றடைகிறது.

இந்த ரயிலில் இரண்டடுக்கு ஏசி ரயில் பெட்டி 1, மூன்றடுக்கு ஏசி 6 , படுக்கை வசதி 9, முன்பதிவில்லா பொது  பெட்டிகள் 4 மாற்றுத்திறனாளிகளுக்கானது 1 லக்கேஜ் பிரேக் வேன் 1 ஆக மொத்தமாக 22 ரயில் பெட்டிகள் இருக்கும் 

இந்த ரயில் கோடை விடுமுறையில் சென்னை மற்றும் திருநெல்வேலி இருந்து சொந்த ஊருக்கு திரும்பும் பெற்றோர்கள், மாணவ மாணவிகள், பொதுமக்கள் ஆகியோருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என ரயில் பயணிகள், வர்த்தகர்கள் , அரசு அலுவலர்கள் பெரும் மகிழ்ச்சி தெரிவித்தனர்  


ரயில் பயணிகள் வர்த்தகர்கள் கோரிக்கையினை ஏற்று இந்த கோடை கால சிறப்பு விரைவு ரயிலை இயக்கிய தெற்கு  ரயில்வே நிர்வாகத்திற்கு ரயில் பயணிகள், வர்த்தகர்கள், பட்டுக்கோட்டை என்கான்ஸ் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கத்தினர் நன்றியை  தெரிவித்துக் கொள்கின்றனர் தொடர்ந்து இந்த ரயிலை இயக்க வேண்டும் எனவும் தெற்கு ரயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கையும் வைக்கின்றனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...