அதிரையில் மகா மட்டமான சாலை அமைத்த நகராட்சி.. நடுத்தெரு, புதுமனைத் தெரு, சேர்மன் வாடி மக்கள் டென்ஷன்

Editorial
0
Ads: Crescent builders - Coming Soon

அதிரை பிரதான சாலைகளான நடுத்தெரு, புதுமனைதெரு, சேர்மன் வாடியில் இருந்து செக்கடி மெடு செல்லும் சாலைகள் குண்டும் குழியுமாக காட்சி தந்தன. அந்த பாதையை பயன்படுத்த முடியாத நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டனர். பல முறை இது குறித்து கோரிக்கை வைத்தும் எந்த பயனும் கிடைக்கவில்லை. மழை நின்ற பிறகு சாலை அமைப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் கடந்த வாரம் காதிர் முகைதீன் மகளிர் பள்ளியில் இருந்து செக்கடிமேடு செல்லும் நடுத்தெரு பிரதான சாலை, செக்கடி மேட்டில் இருந்து சேர்மன் வாடி செல்லும் சாலை, செக்கடி மேட்டில் இருந்து மரைக்கா குளம் செல்லும் புதுமனைத்தெரு பிரதான சாலை கடந்த வெள்ளிக்கிழமை அமைக்கப்பட்டது. 
ஆனால், மறு வெள்ளிக்கிழமை வருவதற்குள் இந்த தார் சாலை கடுமையாக சேதமடைந்து இருக்கிறது. புதுமனைத்தெருவில் பழைய சாலையின் குறுக்கே பொதுமக்கள் வடிகாலுக்காக பள்ளம் தோண்டி இருந்தனர். அதனை சமன் செய்யாமல் மேலேயே புதிய சாலை அமைந்துள்ளதால் குண்டு குழியுமாக காட்சி தருகிறது. வாகனங்களில் செல்லவும் சிரமமாக உள்ளது.
நடுத்தெரு சாலையிலும் சேர்மன்வாடி சாலையிலும் ஜல்லிக்கற்கள் பெயர்ந்துகொண்டு வருகின்றன. சாலையின் இரு ஓரங்களிலும் முறையான கலவை இன்றி சரிந்து மண்ணோடு மண்ணாகி கிடக்கின்றன. இதே நிலை தொடர்ந்தால் இன்னும் சில வாரங்களில் சாலை பழைய மோசமான நிலைக்கு மாறிவிடும்.
இப்படி தரமற்ற சாலையை அமைத்து தங்களின் வரிப்பணத்தை நகராட்சி வீணடிப்பதாகவும், இந்த சாலையை சீரமைக்க வேண்டும், அல்லது தோண்டி எடுத்துவிட்டு புதிய சாலை அமைக்க வேண்டும் எனவும்  பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  



Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...