அதிரை கடற்கரை விரைவில் பொழுதுபோக்கு தலமாகிறது.. இன்று பணிகள் தொடக்கம்

Editorial
0
Ads: Crescent builders - Coming Soon
அதிராம்பட்டினம் கடற்கரையை கடைமடை ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்கம்(கைஃபா) உதவியுடன் தீனுல் இஸ்லாம் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் சுத்தப்படுத்தி அழகுபடுத்தும் திட்டம் இன்று தொடங்கப்பட்டு உள்ளது.

அதிராம்பட்டினம் கடற்கரையும் அதற்கு செல்லக்கூடிய பாதையும் தற்போது புதர்கள் நிரம்பி பயன்பாடற்ற நிலையில் உள்ளது. இவ்வாறு உள்ள நமது அதிராம்பட்டினம் கடற்கரையை தூய்மைப்படுத்தி சுத்தமாகவும், தூய்மையாகவும் மாற்றி தரமான கடற்கரையாக, பொதுமக்களின் பொழுதுபோக்குக்கு ஏற்ற இடமாகவும் மாற்றுவதற்கு ஊரில் உள்ள அனைவரின் ஒத்துழைப்பும் அவசியம்.

இது தொடர்பாக இன்று வியாழக்கிழமை (29/02/2024) முதல் 7 நாட்களுக்கு ஒரு லட்ச ரூபாய் செலவில் மேற்கண்ட தூய்மைப்படுத்தும் பணிகள் நடைபெற உள்ளது. இந்தப் பணிகள் இன்று காலை 10 மணியளவில் கடற்கரை சாலை, ரயில்வே கேட் அருகில் தொடங்கப்பட்டது. இந்த துவக்க விழாவில் அரசியல் கட்சிகள், சமூக இயக்கங்களும், சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...