அதிரை கோயிலில் பொங்கல் பரிசு டோக்கன்.. அதிரை பிறை புகாரை தொடர்ந்து விற்பனையாளருக்கு அரசு எச்சரிக்கை

Editorial
0
Ads: Crescent builders - Coming Soon
கடந்த ஜனவரி மாதம் பொங்கலை ஒட்டி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பாக 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முழு கரும்பு மற்றும் ரூ.1000 ரொக்கப்பணம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இதன்படி, தமிழகத்தில் 2.20 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு தொகுப்பு மற்றும் ரொக்கப்பணம் ரூ.1000 வழங்கப்படுகிறது. ரேஷன் கடை ஊழியர்கள் வீடு, வீடாக சென்று டோக்கன் விநியோகம் செய்வார்கள் என்று அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால் அதிரையில் வீடு வீடாக டோக்கன் விநியோகம் செய்யாமல் மக்களை வர சொல்வதாக புகார் எழுந்தது.

குறிப்பாக சுரைக்காய் கொல்லை பகுதியில் கோயிலுக்கு வந்து மக்கள் டோக்கன் பெற்று செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது. மழை பெய்து வரும் நிலையில் கோயிலுக்கு செல்ல தயக்கப்பட்டு பலர் அங்கு டோக்கன் வாங்காமல் மக்கள் இருந்துள்ளனர். அரசு வீடு வீடாக சென்று டோக்கன் விநியோகிக்க சொல்லி இருக்கும் நிலையில் அதை மீறி இவ்வாறு மழை நேரத்தில் மக்களை அலைக்கழிப்பது, ரேசன் கடை போன்ற பொதுவான இடத்துக்கு மக்களை வர சொல்லாமல் அனைத்து மதத்தினர் வாழும் பகுதியில் குறிப்பிட்ட மதம் சார்ந்த இடத்துக்கு வர சொல்லி அழைப்பது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.  

இது தொடர்பாக அதிரை பிறை தரப்பில் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு புகார் அளிக்கப்பட்டு இருந்தது. இதற்கு பதிலளித்து இருந்த தமிழ்நாடு அரசின் பொது விநியோக துணை பதிவாளர் அளித்துள்ள விளக்கத்தில், "பார்வை 1-இல் காணும் மனு தொடர்பாக அதிராமப்பட்டினம் அங்காடி விற்பனையாளரிடம் புகார் குறித்து விசாரணை செய்ததில், மேற்படி அங்காடியில் 1000 குடும்ப அட்டைகளுக்கு மேல் உள்ளதாகவும் காலையில் டோக்கன் கொடுத்துவிட்டு மதியம் அங்காடி திறந்து பொருட்களை கொடுக்க வேண்டிய சூழ்நிலையில் ஒரு நாள் மழை பெய்த பொழுது கோவிலில் வைத்து கொடுத்தாகவும் மற்ற நாட்களில் வீடுகளுக்கு சென்று வழங்கியதாவும் இனிவரும் காலங்களில் இதுபோன்று நிகழ்ந்தால் நடவடிக்கை எடுக்க நேரிடும் என அங்காடி விற்பனையாளரை எச்சரித்ததாக பார்வை 2 இல் காணும் அறிக்கையில் கூறியுள்ளார் என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...