அதிரை காதர் முகைதீன் பள்ளிகள் வெள்ளிக்கிழமை நடப்பது ஏன்? அதிரை பிறையிடம் தலைமையாசிரியர் விளக்கம்

Editorial
0
Ads: Crescent builders - Coming Soon
அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளி மற்றும் காதிர் முகைதீன் பெண்கள் பள்ளிகளில் ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் பயின்று வருகிறார்கள். அரசு உதவி பெறும் சிறுபான்மை கல்வி நிறுவனமான இங்கு வாரந்தோறும் வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை விடுமுறை விடப்பட்டு வருகிறது.

இஸ்லாமியர்களுக்கு வெள்ளிக்கிழமை சிறப்பு தினமாக இருப்பதால் அந்த நாளில் அதிரையில் உள்ள சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் ஞாயிற்றுக்கிழமைக்கு பதிலாக வெள்ளிக்கிழமை வேறு விடுமுறை விடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக காதிர் முகைதீன் பள்ளிகளில்  வெள்ளிக்கிழமை மாணவ மாணவிகளுக்கு பள்ளி நடப்பதாக பெற்றோர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இது குறித்து அதிரை பிறை தரப்பில் காதிர் முகைதீன்  ஆண்கள் பள்ளியின் தலைமை ஆசிரியர் அஜ்முதீன்  அவர்களை தொடர்பு கொண்டு பேசினோம். அப்போது அவர் கூறியதாவது, "வெள்ளிக்கிழமை விடுமுறை விட வேண்டும் என்பது நமது விருப்பம். ஆனால் அரசு உதவி பெறும் பள்ளியான இங்கு அரசு தேர்வுகளை வேறு தேதியில் நடத்த முடியாது. இரண்டு ரிவிசன் தேர்வுகள் வாரத்தின் ஐந்து நாட்களும் அடுத்தடுத்து நடைபெற்று வருகின்றன.

வெள்ளிக்கிழமை எதாவது ஒரு வகுப்புக்கு தேர்வு நடந்துவிடுகிறது. ஒரு வகுப்புக்கு தேர்வு நடந்தால் கூட மற்ற வகுப்பு மாணவர்களையும் பள்ளிக்கு வர வைக்க வேண்டிய நிலை உள்ளது. காரணம் வருகை பதிவேடு  முறை ஆன்லைன் மயமாக்கப்பட்டு இருக்கிறது. வருகை பதிவு அரசால் கண்காணிக்கப்படுகிறது. வெள்ளிக்கிழமை ஒரு வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடைபெற்று அவர்களை மட்டும் பள்ளிக்கு அழைத்தால் மற்ற வகுப்பு மாணவர்கள் விடுமுறை எடுத்ததாக வருகை பதிவேட்டில் பதிவாகிவிடும் என்பதால் அவர்களையும் வர சொல்கிறோம். அதே நேரம் தொழுகைக்கு முக்கியத்துவம் கொடுத்து முன்கூட்டியே மாணவர்களை ஜும்மா தொழுகைக்கு அனுப்பியும் விடுகிறோம்.

தனியார் பள்ளிகள் ரிவிசன் தேர்வுக்கு அரசு கேள்விதாள்களை பயன்படுத்துவது இல்லை என்பதால் அவர்கள் வெள்ளி விடுமுறை விடுகிறார்கள். நம்மால் அப்படி செய்ய முடியாது. வெள்ளிக்கிழமை தேர்வை ஞாயிற்றுக்கிழமை நடத்தினால் கேள்வித்தாள் வெளியில் கசிந்துவிடும். முன்பு மாவட்ட அளவில் வினாத் தாள்கள் தயாரிக்கப்பட்டு வந்தன. ஆனால் இன்று தமிழ்நாடு முழுவதும் ஒரே கேள்வித்தாள் தான்.

காதிர் முகைதீன் பெண்கள் பள்ளியிலும் இதே நிலைதான்.  இதனால் அதிரை மட்டுமின்றி தஞ்சாவூர் மாவட்டத்தின் பல இஸ்லாமிய பள்ளிகள் வெள்ளிக்கிழமை தேர்வுகளுக்காக இயங்குகின்றன. வெள்ளிக்கிழமை விடுமுறையை தேர்வு காலங்களிலும் உறுதிப்படுத்த பல்வேறு கோரிக்கைகள் அரசிடம் வைக்கப்பட்டு உள்ளன. நான் கூட கடிதங்கள் அனுப்பி இருக்கிறேன். வெள்ளிக்கிழமை விடுமுறை தொடர வேண்டும் என்பதே நம் விருப்பம்." என்றார். 

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...