அதிரை சேர்மன் வாடி அருகே விபத்து.. குடிபோதையில் பைக் ஒட்டி வந்து கார் மீது மோதிய இளைஞர்

Editorial
0
Ads: Crescent builders - Coming Soon

அதிரை சேர்மன்வாடி வண்டிப்பேட்டை  இடையேயான சாலையில் பைக் மற்றும் கார் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. பேருந்து நிலையம் நோக்கிய பாதையில் சென்று கொண்டிருந்த காரை பின்னால் வந்த பைக் முந்தி செல்ல முயன்ற போது மோதியதில் விபத்து ஏற்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 
சம்பவத்தை நேரில் பார்த்தவர்களிடம் விசாரிக்கையில் குடிபோதையில் பைக் ஒட்டி வந்த இளைஞர் கார் மீது மோதியதில் அவருக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் கொண்டு செல்லப்பட்டுள்ளார். அவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...