அதிரையில் உயிர் பறிக்கும் விபத்துகளை தடுக்காவிட்டால் ஆர்ப்பாட்டம்.. அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் போலீசிடம் மனு

Editorial
0
Ads: Crescent builders - Coming Soon
அதிரையில் சாலை விபத்துகளை கட்டுப்படுத்த வலியுறுத்தி மூன்று கோரிக்கைகளை முன் வைத்துள்ள அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் முஹல்லாக்களின் அமைப்பு இந்த கோரிக்கைகளை காவல்துறை செய்ய தவறும் பட்சத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என எச்சரித்துள்ளது.

நேற்றைய தினம் மனிதநேய மக்கள் கட்சி, எஸ்டிபிஐ, மனிதநேய ஜனநாயக கட்சி, ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகம், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் அதிரை தாருத் தவ்ஹீத் ஆகிய அமைப்புகளின் நிர்வாகிகள் இணைந்து அதிரை காவல் ஆய்வாளரிடம் விபத்துகளை கட்டுப்படுத்துவது தொடர்பாக கோரிக்கை மனு அளித்தனர். 
அதில் அவர்கள் குறிப்பிட்டுள்ளதாவது, "நமது ஊரில் கடந்த சில நாட்களாக அதிகமான விபத்துகளால் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் சார்பாக காவல் உதவி ஆய்வாளரை சந்தித்து சில கோரிக்கைகளை வைத்தோம். அவர் திங்கட்கிழமை சில விசயங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளித்தார். அதை அவர் செய்து தராத காரணத்தால் நாங்கள் தங்களிடம் சில கோரிக்கைகளை மனுவாக தருகிறோம்.
1) பஸ் ஸ்டாண்டு முதல் ரயில்வே கேட் வரை ஈசிஆரில் காலை 9 மணி முதல் 10 மணி வரை மற்றும் மதியம் 1 மணி முதல் 3 மணி வரை காவலர்களை நியமித்து கண்காணிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

2) பேருந்து நிலையம் முதல் ரயில்வே கேட் வரை ஈசிஆர் சாலையோரத்தில் அமைந்துள்ள கடைகளை அகற்றி தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

3) அதிரை முழுவதும் சாலை சந்திப்புகளில் சாலை தடுப்புகள் அமைத்து தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இவை அனைத்தையும் போர்க்கால அடிப்படையில் ஒரு வார காலத்திற்குள் செய்து தருமாறு கேட்டுக்கொள்கிறோம். அப்படி செய்ய தவறும் பட்சத்தில் அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் அரசியல் கட்சிகள் இணைந்து அனைத்து இயக்க தலைவர்கள், பொதுமக்களை திரட்டி காவல்துறை மற்றும் நகராட்சியை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் நடத்தப்படும் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்." என்று குறிப்பிட்டுள்ளனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...