அதிரை பிலால் நகர் சிறுவர்களின் அவல நிலை.. ஏறெடுத்துப் பார்க்காத ஏரிப்புறக்கரை ஊராட்சி

Editorial
0
ஏரிப்புறக்கரை ஊராட்சிக்கு உட்பட்ட பிலால் நகர் பகுதிகயில் பொதுமக்கள் பயன்படுத்தும் பாதைகள் குண்டும் குழியுமாக காட்சியளிக்கின்றன. குறிப்பாக மழைக்காலங்களில் மிக மோசமான பாதிப்பை பல ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் சந்தித்து வருகிறார்கள். தொடர் மழையால் அப்பகுதியில் மழை நீர் தேங்கி மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகிறார்கள்.

வீடியோ

தற்போது பெய்து வரும் தொடர் மழை காரணமாக பாதை முழுவதும் நீரில் மூழ்கி பயன்படுத்த இயலாத நிலை ஏற்பட்டு உள்ளது. சேரும் சகதியுமான பாதைகள் கற்களை வைத்து பள்ளி சிறார்கள் தாண்டி தாண்டி செல்லும் அவல நிலை தொடர்கிறது. உடனடியாக ஊராட்சி நிர்வாகம் இப்பகுதியில் தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுப்பதுடன் பாதையை சீரமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கேட்டுக்கொண்டு உள்ளனர்.

இதுபோன்ற மோசமான அடிப்படை வசதிகளை சுட்டிக்காட்டி அதிரை நகராட்சியுடன் இப்பகுதியை இணை
இணைக்க வேண்டும் என சிலர் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், அதிரையின் நிலையும் மிக மோசமாக உள்ளதை நாம் சுட்டிக்காட்டி உள்ளோம். ஏரிப்புறக்கரையில் இருந்து பிலால் நகர், சாணாவயல், சவுக்கு கொல்லையை பிரித்து தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கையும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...