இதனால் அதிரையிலேயே ஆன்லைன் தளங்களின் டெலிவரி பாய்ஸ்கள் பலர் இரு சக்கர வாகனங்களில் பொருட்களை வீடு வீடாக விநியோகம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் அதிரை புதுமனைத் தெருவை சேர்ந்த ஒருவர் அமேசான் தளத்தில் தையல் மெசின் ஒன்றை ஆர்டர் செய்து இருக்கிறார். வீட்டுக்கு வந்த பார்சலை பிரித்துப்பார்த்த அவருக்கே அதிர்ச்சி.
உள்ளே தையல் இயந்திரத்துக்கு பெண்களின் உள்ளாடைகள் இருந்துள்ளன. இதை தான் ஆர்டர் செய்யவில்லை என்று தெரிவிக்கும் அந்த நபர், ஏதோ சந்தேகமளிக்கும் வகையில் இது உள்ளதாக கூறினார். இதுபோன்ற தவறான டெலிவரி நடந்தால் உடனடியாக சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு புகாரளிக்கவும்.