அதிரை நகராட்சியின் அலட்சியம்.. காங்கிரஸ் நகர தலைவர் தமீம் அன்சாரி கண்டனம்

Editorial
0
அதிராம்பட்டினம் நகராட்சி எல்லைக்குட்பட்ட 27 வார்டுகளிலும் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் சேவை செய்யும் அரசின் முக்கிய துறைகளை உள்ளடக்கி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெற்று தீர்வு காண மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் நாளை தொடங்குகிறது.

காவல் நிலையம் எதிரே உள்ள சமுதாயக் கூடம் எனப்படும் செல்லியம்மன் கோயில் திருமண மண்டபத்தில் இந்த முகாம் 5 நாட்கள் நடத்தப்பட உள்ளது. பரந்து விரிந்த அதிராம்பட்டினத்தில் அனைத்து வார்டுகளுக்கும் ஒரே இடத்தில் முகாம் வைப்பது மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் என்றும், அதிரையின் பல்வேறு பகுதிகளில் உள்ள மண்டபங்கள், பள்ளிகள், முஹல்லா ஜமாத் அரங்கங்கள் ஷம்சுல் இஸ்லாம் சங்கம், தாஜுல் இஸ்லாம் சங்கம், நூருல் முஹம்மதியா சங்கம், தீனும் இஸ்லாம் சங்  அலுவலகங்கள், அரங்கங்களில் இதனை வைத்தால் மக்கள் பயனடைவார்கள் என்று நாம் முந்தைய பதிவில் குறிப்பிட்டு இருந்தோம்.

இந்த நிலையில் ஒரே இடத்தில் இந்த முகாமை நடத்தும் அதிரை நகராட்சிக்கு திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து நகர காங்கிரஸ் தலைவர் தமீம் அன்சாரி நம்மிடம் தெரிவிக்கையில், "அதிராம்பட்டினம் நகராட்சியின் அலட்சியத்தால் மக்களுடன் முதல்வர் என்ற திட்டம் நம் ஊரில் ஒரே ஒரு இடத்தில் மட்டும் நடைபெறுகிறது. 

இதனை அதிராம்பட்டினம் நகர காங்கிரஸ் வண்மையாக கண்டிப்பதுடன் உடனே மக்களுக்கு ஏற்றார்போல்  மூன்று அல்லது நான்கு பகுதிகளில் நடத்த வேண்டும். அருகில் உள்ள பட்டுக்கோட்டை நகராட்சியில் ஐந்து இடங்களில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது." என்றார்.





Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...