அதிரை நகராட்சி.. பட்டுக்கோட்டையை பார்த்து திருந்துமா? மக்கள் அருகே வராத “மக்களுடன் முதல்வர்” திட்ட முகாம்

Editorial
0
பொதுமக்களின் குறைகளைத் தீர்ப்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவுப்படி `மக்களைத் தேடி முதல்வர்’ என்ற சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் அதிராம்பட்டினத்தில் வரும் திங்கட்கிழமை முதக் செல்லியம்மன் கோயில் திருமண மண்டபத்தில் இந்த முகாம் 5 நாட்கள் நடத்தப்பட உள்ளது. அதில் பின்வரும் ஆணையில் குறிப்பிடப்பட்ட துறைகள் பங்கேற்க உள்ளன. எந்தெந்த வார்டுகளில் எந்த நாளில் முகாம் நடைபெறும் என்ற விபரமும் அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

அதில், “அதிராம்பட்டினம் நகராட்சி எல்லைக்குட்பட்ட 27 வார்டுகளிலும் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் சேவை செய்யும் அரசின் முக்கிய துறைகளை உள்ளடக்கி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெற்று தீர்வு காண தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களுடன் முதல்வர் முகாமில் கலந்துகொள்ள உள்ள துறைகள் விபரம்:

1. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை
2. எரிசக்தி துறை
3. வருவாய் துறை
4. காவல் துறை
5. மாற்றுதிறனாளிகள் துறை
6. வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை
7. சமூகபாதுகாப்பு துறை
8. கூட்டுறவு துறை
9. தாட்கோ
10.ஆதிதிராவிடர் நலத்துறை
11.சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை

மேற்கண்ட துறைகள் மூலம் கோரிக்கை மனுக்கள் பெற்று தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. இம்முகாமிற்கு மேற்கண்ட துறைகளை ஒருங்கிணைத்தல் அடிப்படை வசதிகள் போன்ற ஏற்பாடுகள் அதிராம்பட்டினம் நகராட்சி வாயிலாக செய்து கொடுக்கப்படவுள்ளது. இம்முகாம் வருகின்ற 18.12.2023-ம் தேதி திங்கட்கிழமை முதல் 5 நாட்களுக்கு இணைப்பில் கண்டுள்ள அட்டவணையின் படி நடைபெற உள்ளது என நகராட்சி தெரிவித்துள்ளது.

பரந்து விரிந்த அதிராம்பட்டினத்தில் அனைத்து வார்டுகளுக்கும் ஒரே இடத்தில் முகாம் வைப்பது மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும். அதிரையின் பல்வேறு பகுதிகளில் மண்டபங்கள், பள்ளிகள், முஹல்லா ஜமாத் அரங்கங்கள் உள்ளன. ஷம்சுல் இஸ்லாம் சங்கம், தாஜுல் இஸ்லாம் சங்கம், நூருல் முஹம்மதியா சங்கம், தீனும் இஸ்லாம் சங்கம் என பல சங்கங்களும், அதற்கென அலுவலகங்களும் உள்ளன. அந்த அலுவலகங்கள், அரங்கங்களில் வைத்தால் மக்கள் பயனடைவார்கள்.

பட்டுக்கோட்டையில் 5 இடங்களில் இந்த முகாம்கள் நடத்தப்படுகின்றன. ஆனால் அதிரையில் ஒரே இடத்தில் மட்டுமே நகராட்சி நிர்வாகம் இதை நடத்துகிறது. மக்களுடன் முதல்வர் என்ற பெயரில் திட்டத்தை வைத்துவிட்டு மக்கள் வசிக்கும் இடம் அருகே முகாம் வைக்காமல் எங்கோ ஒரு இடத்தில் வைத்துவிட்டு அனைத்து வார்டு மக்களையும் அங்கு அழைப்பது எப்படி சரியாகும் என்ற கேள்வி எழுகிறது. 




Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...