அதிரை மக்களே உஷார்.. வாக்காளர் அட்டை முகாம்.. ஆதார் அட்டை கட்டாயமில்லை! தப்பி தவறு கூட கொடுக்காதீங்க

Editorial
0

அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் புதிய வாக்காளர்களை இணைக்கும் பணியில் தேர்தல் ஆணையம் முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் இன்று வார்டு வாரியாக முகாம் அமைக்கப்பட்டு வாக்காளர் அடையாளர் அட்டை விண்ணப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி தேர்தல் ஆணையம் இன்று வாக்காளர் பெய்ர் சேர்த்தல், நீக்கம், திருத்தத்துக்கான சிறப்பு முகாமை இன்று நடத்தி வருகிறது.

அதன்படி இன்று 04.11.2023 (சனிக்கிழமை), நாளை 05.11.2023 (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் அடுத்த வாரம் 18.11.2023 (சனிக்கிழமை), 19.11.2023 (ஞாயிற்றுக்கிழமை) சிறப்பு முகாம்களை நடத்தி வருகிறது. அதன்படி இன்று அதிரையில் உள்ள ஒவ்வொரு வார்டிலும் சிறப்பு முகாம்கள் இன்று நடைபெற்று வருகின்றன. இதற்கு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, பிறப்புச் சான்றிதழ் அல்லது பாஸ்போர்ட் அல்லது ஓட்டுநர் உரிமம் அல்லது பான் கார்டு ஆகிய அடையாள சான்றிதழ்கள், ரேஷன் கார்டு அல்லது பாஸ்போர்ட் அல்லது டிஎல் அல்லது பயன்பாட்டு பில் ஆகிய முகவரிச் சான்றிதழ்கள் அவசியம்.

ஆதார் அட்டையுடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைப்பது இன்னும் கட்டாயமாக்கப்படவில்லை. எனவே இந்த ஆதார் எண் அல்லது அட்டை இல்லாமலேயே விண்ணப்பிக்கலாம். ஒரு வேளை அதிகாரிகள் அதை கேட்டாலும் கொடுக்க வேண்டாம். ஏனெனில் ஆதார் - வாக்காளர் அட்டை இணைப்பால் ஏற்படும் விளைவுகளை நாம் பலமுறை தெரிவித்து இருக்கிறோம். அதிகாரிகள் கட்டாயப்படுத்தினால், தேர்தல் ஆணையத்தின் உத்தரவை காட்ட சொல்லுங்கள். ஏனெனில் ஆன்லைனில் புதிய வாக்காளர் அட்டை விண்ணப்பிக்கும்போது கூட ஆதாரை விருப்ப ஆவணமாகவே வைத்து உள்ளார்கள். கட்டாயமாக அதை சமர்பிக்க சொல்லவில்லை.





Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...