அதிரை நகராட்சி ஒதுக்கிய ₹2 லட்சம் என்னாச்சு? 160 நாய்களுக்கு கருத்தடை செய்ய ஜூலையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்

Editorial
0
அதிரையில் தெரு நாய்களின் தொல்லை காரணமாக பொதுமக்கள் கடும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக சிறார்கள், பெண்கள் இதனால் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். சமூக ஆர்வலர்களும் நாய்களை கட்டுப்படுத்த கோரிக்கை விடுத்து வருகிறார்கள். ஆனால் நடவடிக்கை எடுத்ததைபோல் தெரியவில்லை.

கடந்த வாரம் இரவு அதிரை சேர்மன் வாடி - வண்டிப்பேட்டை இடைப்பட்ட சாலையில் இரு சக்கர வாகனம் சென்றுகொண்டிருந்தபோது நாய்கள் குறுக்கே புகுந்தன. இருசக்கர வாகனத்தில் சென்றவர் சுதாரித்ததால் விபத்து தவிர்க்கப்பட்டது. கடந்த மாதம் புதுமணை தெரு 4வது லைனில் நடந்து சென்ற பெண்ணை நாய் ஒன்று துரத்தி கடித்தது. அந்த பெண் கீழே விழுந்ததில் கை எழும்பில் பலத்த காயம் ஏற்ப்பட்டது. பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் நாய்களை கட்டுப்படுத்த கோரிக்கை விடுத்து வருகிறார்கள். ஆனால் நடவடிக்கை எடுத்ததைபோல் தெரியவில்லை.

இதற்கிடையே கடந்த ஜூலை மாதம் நகராட்சி சபை கூட்டத்தில் நாய் தொல்லையை கட்டுப்படுத்த பின் வரும் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி உள்ளார்கள். அதன்படி, "அதிராம்பட்டினம் நகராட்சியில் தெரு நாய்களால் இருசக்கரம் மற்றும் நான்கு சக்கரங்களில் செல்வோருக்கு அதிக சிரமம் ஏற்படுவதாகவும், பல இடங்களில் தெரு நாய்களால் சாலை விபத்து அடிக்கடி ஏற்படுவதாகவும், அதிகாலை நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை தெரு நாய்கள் விரட்டுவதால் அதிக அளவில் விபத்துகள் ஏற்பட காரணமாக உள்ளதாகவும் புகார்கள் வந்த வண்ணம் உள்ளதாலும் நகராட்சி நிர்வாக இயக்குநர், சென்னை அவர்களின் அறிவுரையின் அடிப்படையிலும் அதிராம்பட்டினம் நகராட்சி 27 வார்டுகளில் தெருவில் 120 தெரு நாய்கள் உள்ளது, எனவும் வீட்டு வளரப்பு நாய்கள் 15 உள்ளது எனவும் அறியப்பட்டு இவற்றை கருத்தடை செய்து சுட்டுப்படுத்துவதற்கு நாய் ஒன்றுக்கு ரூ.1450/- கட்டணம் செலுத்த இந்திய விலங்குகள் நலவாரியத்தால் நிரணயம் செய்யப்பட்டுள்ளது. 

இந்நகராட்சியில் ஒரு நாய்க்கு நிர்ணயிக்கப்பட்ட தொகையில் 50% தொகை நகராட்சிக்கு திரும்ப வழங்கப்படும் என்பதனால் மேற்படி நல வாரியத்தின் விதிமுறையின்படி நகர குழு அமைத்து குழு மூலம் கடிதம் அனுப்பப்பட்டால் 50% சதவீதம் தொகை திரும்ப கிடைக்கப்பெறும். ஆகவே தெரு நாய்களுக்கு கருத்தடை குறித்து நடவடிக்கைகளை மேற்கொள்ள கீழ்க்கண்டவாறு குழு அமைத்து மன்றத்தின் பார்வைக்கு வைக்கப்படுகிறது.

குழுவின் தலைவர்: ஆணையர், அதிராம்பட்டினம் நகராட்சி

உறுப்பினர்கள்: அதிராம்பட்டினம் மருத்துவமனை கால்நடைத்துறை மருத்துவர்(Vetnury Department), இந்திய விலங்குகள் நலவாரியத்துறை அலுவலர் (AWB), பொது சுகாதார பிரிவு - சுகாதார ஆய்வாளர் (Health Inspector) அரசு சார்பற்ற அமைப்பு (NGO).

மேற்கண்டவாறு குழுக்கள் அமைக்கப்பட்டு இந்திய விலங்குகள் நலவாரியத்துறைக்கு கருத்துரு அனுப்பி தெருநாய்க்கு கருத்தடை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளவும், அதற்குரிய உத்தேச செலவினம் ரூ 200000/-ஐ பொதுநிதியில் இருந்து மேற்கொள்ளவும் மன்றத்தின் அனுமதி வேண்டப்படுகிறது.

இந்திய விலங்குகள் நலவாரியம் நிர்ணயம் செய்த கட்டணத்தில் தெரு நாய்களுக்கு கருத்தடை செய்ய ஆகும் செலவினத்தை பொதுநிதியில் இருந்து மேற்கொள்ள மன்ற அனுமதி வழங்கலாம் 

ஆ) இந்திய விலங்குகள் நலவாரியம் விதிமுறையின்படி குழு தேர்வு செய்யப்பட்டதை மன்ற அங்கீகரிக்கலாம். ந.க.எண். 1009/2023/எச்1})" என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டு 3 மாதங்கள் கடந்துள்ள நிலையில், அந்த சமயத்தில் இருந்ததைவிட நாய்கள் தொல்லையும், அதன் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. ஒதுக்கப்பட்ட ₹2 லட்சம் நிதியில் கருத்தடை செய்யப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...