அதிரை அருகே கடல்போல் காட்சியளிக்கும் தொக்காலிக்காடு அணை! ததும்பும் தண்ணீர்

Editorial
0
அதிரை அருகே தொக்காலிக்காடு கிராமத்தில் மகாராஜசமுத்திரம் காட்டாற்று அணை தண்ணீரால் ததும்புகிறது. கல்லணைக்கால்வாய் பாசன கடைமடை பகுதியான ராஜாமடம், மகிழங்கோட்டை, தொக்காலிக்காடு, சேண்டாக்கோட்டை, பள்ளிகொண்டான், நடுவிக்காடு, மிலாரிக்காடு உள்ளிட்ட 10-க்கு மேற்பட்ட கிராமங்கள் பாசன வசதி பெறும் வகையில் கடந்த 1955-ம் ஆண்டு மகாராஜசமுத்திரம் அணை கட்டப்பட்டு அப்போதைய முதலமைச்சர் காமராஜரால் திறந்து வைக்கப்பட்டது. இந்த அணை மூலம் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று ஒருபோக சாகுபடியும் நடைபெற்று வந்தது.
பொதுப்பணித்துறை கண்காணிப்பில் இருந்து வரும் இந்த அணை காலப்போக்கில் பராமரிப்பின்றி சாகுபடிக்கு பயன்படாமல் உள்ளதாக கூறப்படுகிறது. அதிரை மற்றும் சுற்று வட்டார பகுதி மக்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த அணையில் குளித்து மகிழ்வது வழக்கம். ஆனால், தற்போது அணைக்கு செல்லும் பாதை சரியாக இல்லாமல், கருவேல மரங்கள் சூழ்ந்து உள்ளது. 
பாதைகள் சேரும் சகதியுமாக காட்சி தருகின்றன. அதையும் மீறி செல்ல வேண்டும் என விரும்பினால் இரு சக்கர வாகனங்களை வாய்க்கால் அருகிலேயே விட்டுவிட்டு செல்லலாம். அதேபோல் தண்ணீர் வேகம் அதிகம் உள்ளதால் சிறுவர்கள் பெரியவர்கள் துணை இன்றி செல்ல வேண்டாம். பெரியவர்களும் ஆழமான பகுதிக்கு செல்லாமல் பாதுகாப்பான குளியலை மேற்கொள்ளலாம்.
படங்கள்: நூருல் 

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...