அதிரையை பேருராட்சியாவே மாத்திருங்க.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திக்கலாம் என புலம்பும் மக்கள்

Editorial
0
கடந்த நவம்பர் 6 ஆம் தேதி நடைபெற்ற அதிரை நகர சபை கூட்டத்தில், "நகராட்சிக்கு அருகில் உள்ள 1.) ஏரிப்புறக்கரை, 2.)மழவேனிற்காடு, 3.) நரசிங்கபுரம் ஆகிய கிராமங்களை இணைக்க கோரி பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் வந்தவண்ணம் உள்ளது. எனவே, இந்நகராட்சிக்கு அருகில் உள்ள 1.) ஏரிப்புரக்கரை, 2) மழவேனிற்காடு, 3.) நரசிங்கபுரம் ஆகிய கிராமங்களை மக்கள் தொகை மற்றும் வருவாய் அடிப்படையில் அதிராம்பட்டினம் நகராட்சியுடன் இணைக்க ஏதுவாக நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர், தஞ்சாவூர் அவர்களின் வழியாக மாவட்ட ஆட்சியர், தஞ்சாவூர் அவர்களுக்கு கருத்துரு அனுப்பி வைக்க மன்றத்தின் அனுமதி வேண்டப்படுகிறது." என்று தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது.

இதற்கு அதிரை நகர மக்கள் மட்டுமின்றி இணைப்பதாக அறிவிக்கப்பட்ட கிராம மக்களும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்கள். நேற்று ஆயிரக்கணக்கானோர் நகராட்சியை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது மக்கள் குப்பை கொட்டும் இடமில்லை, நகராட்சி அலுவலகம் கட்ட இடமில்லை, மக்கள் தொகை இல்லை என்றால் இதை ஏன் நகராட்சிதாக அறிவித்தீர்கள்? என கேள்வி எழுப்பினர்.

குறிப்பாக நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டாலும் சாலை, வடிகால் தொல்லைகள் தீரவில்லை எனவும் நாய், பசு தொல்லை அதிகரித்து இருப்பதாகவும் கூறும் மக்கள், சொத்து வரி உயர்ந்தை தவிர நகராட்சியால் எந்த மாற்றமும் நடக்கவில்லை என்றும் பேசாமல் இதை பேரூராட்சியாகவே வைத்திருக்கலாம் எனவும் கூறுகிறார்கள்.Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...