அதிரை ECR-இல் பெண்களை துன்புறுத்தும் குடிகாரர்கள்.. காவல் நிலையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் புகார்

Editorial
0
அதிரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் ஹாஜா மைதின் அதிரை காவல் ஆய்வாளருக்கு புகார் கடிதம் எழுதியுள்ளார். அதில், "அதிராம்பட்டினம் ECR சாலையில் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் அருகில் அரசு ஒயின்சாப் அமைந்துள்ளது.

இதில் தினந்தோறும் கடை திறக்கும் முன்பு மதுப் பிரியர்கள் கட்சி அலுவலக வாயிலில் வியாபாரம் செய்வதோடு அங்கு வைத்து குடிக்கவும் செய்கிறார்கள். குடித்து விட்டு அருகில் கடை நடத்துபவர்கலிடம் தகராறு செய்வது மட்டுமல்ல, அந்த சாலையில் பெண்கள் நடப்பதற்கு கூட முடியாத அளவிர்க்கு ஆபாச வார்த்தையில் பேசுகிறார்கள்.

போக்குவரத்து இடையூறு உண்டாகிறது விபத்துகள் நடக்கிறது. எனவே தயவு செய்து அங்கு இருக்கும் அரசு மதுபான கடையை இடமாற்றம் செய்ய வேண்டும் இடமாற்றம் செய்யும்வரை அந்த இடத்தில் சட்ட மீறல் நடக்காத வண்ணம் பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...