அதிரை CMP லேனில் மரண பயத்தில் செல்லும் மக்கள்.. ஒராண்டாக கண்டுகொள்ளாத கவுன்சிலரும், நகராட்சியும்

Editorial
0
அதிராம்பட்டினம்: இந்த புகைப்படத்தில் உள்ள குழிகளை பார்த்தால் யாரோ சிரிப்பதைபோல் உள்ளதா? நகராட்சி, வார்டு கவுன்சிலரின் செயல்பாட்டை பார்த்து ஏளனமாக சிரிப்பதாக எடுத்துக்கொள்ளலாம். ஏனெனில் ஓராண்டாகியும் இந்த ஆளை விழுங்கும் அபாய குழியை மூடாமல் உள்ளார்கள்.
சி.எம்.பி லேன் பகுதி 2வது வார்டில் தான் இது உள்ளது. ஷிபா மருத்துவமனை மற்றும் இமாம் ஷாபி பள்ளிக்கு பின்புறமாக அமைந்துள்ள இந்த பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். சிறுவர்கள் அதிகம் விளையாடும் பகுதியாக இது உள்ளது.
சி.எம்.பி லேனில் இருந்து பட்டுக்கோட்டை, ஷிபா மருத்துவமனை செல்ல பெரும்பாலானோர் இந்த பாதையையே பயன்படுத்துகிறார்கள். இங்குள்ள முதல் வளைவில் ஆட்களை விழும் அளவுக்கு ராட்சத குழிகள் உள்ளன.
வாய்க்கால் அவ்வழியாக செல்வதால் அதன் மூடி உடைந்து பெரிய குழிகளாக உள்ளன. இரவு நேரங்களில் இவ்வழியில் போதிய வெளிச்சமில்லை. இதனால் அதில் பலரும் தவறி விழுவதற்கான வாய்ப்புகளும், வாகனங்கள் விபத்தில் சிக்குவதற்கான அபாயமும் உள்ளது.
இது தொடர்பாக கடந்த ஆண்டும் இதே செப்டம்பர் மாதம் அதிரை பிறை செய்தி வெளியிட்டது. ஆண்டுக்கணக்கில் இந்த குழிகள் இருந்தும் இப்பகுதி வார்டு கவுன்சிலரும் நகராட்சி நிர்வாகமும் கண்டுகொள்ளவில்லை. விபத்துகள் ஏற்படுவதற்கு முன்பாக இதை சீரமைக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...