அதிரையில் கடந்த 2 மாதத்திற்கான மின் பயன்பாட்டு அளவை குறிக்க மின்வாரியத்தில் இருந்து இதுவரை பல வீடுகளுக்கு ஊழியர் வருகை தரவில்லை. நாளாக நாளாக மின் பயன்பாட்டு அளவு அதிகரிக்கும் பட்சத்தில் மின் கட்டணம் இரட்டிப்பாகும் சூழலும் உள்ளது. இது தொடர்பாக அதிரை மின் ஊழியரிடம் அதிரை பிறை தரப்பில் தொடர்புகொண்டு விசாரித்தோம்.
அதிரையில் மின் பயன்பாட்டை குறிக்கும் ஊழியர் மருத்துவ விடுமுறை எடுத்துவிட்டதால், தாமதம் ஏற்பட்டு இருப்பதாகவும் மாற்று ஊழியரை இதற்காக நியமித்து அவர் வீடுகளில் மின் பயன்பாட்டை குறித்து வருவதாகவும் தெரிவித்தார். மக்களாகவே மின் பயன்பாட்டு அளவை குறித்து மின் வாரியத்துக்கு வந்து கட்டணம் செலுத்தலாமா என்று நாம் கேட்டபோது, உரிய தேதிக்குள் வந்தால் ஏற்கப்படும் என்றார்.