அதிரை அர்டா நிலத்தில் மருத்துவ முகாம்.. அரசியல் சூழ்ச்சிகளை சுழற்றியடித்த சமூக ஆர்வலர்கள்

Editorial
0
அதிராம்பட்டினத்தில் கடந்த 1983 ஆம் ஆண்டு அதிரை ஊரக மேம்பாட்டு சங்கம் (ARDA) சார்பில் அதிரை ஷிபா மருத்துவமனைக்கு என மெயின் ரோடு அருகே அரசு இரண்டாம் எண் பள்ளிக்கு பின்புறம் 1.34 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டது. ஆனால், அந்த இடத்தை அரசியல் பின்புலம் கொண்ட தனிநபர்கள் அப்போதைய பேரூராட்சி துணையோடு ஆக்கிரமிக்க முயன்றதாக கூறப்படுகிறது.

அரசு அர்டாவுக்கு நிலம் விற்பனை செய்ததை எதிர்த்து வீரகனேசன் என்பவர் உரிமையியல் வழக்கு ஒன்றை தொடுத்தார். அவ்வழக்கினை பட்டுக்கோட்டை உரிமையியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பின்னர் மேற்படி வீரகனேசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிப் பேராணை மனு ஒன்றை தாக்கல் செய்தார். அவரது மேல்முறையீட்டு மனுவையும் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
அதன் பிறகு சங்கத்தின் சார்பில் அவ்விடத்தில் மருத்துவமனை கட்டுவதற்காக அதிராம்பட்டினம் பேரூராட்சியில் விண்ணப்பித்து, அனுமதி பெற்ற நிலையில், எதிர்தரப்பினரும் மேல்முறையீடு மனுக்களை தாக்கல் செய்து அடுத்தடுத்து சட்டப்போராட்டங்களை நடத்தியது. ஆனால் கடைசி வரை அர்டா நிர்வாகம் அதை எதிர்த்து போராடி வென்றுள்ளது.
தற்போதைய நகராட்சி நிர்வாகமும் அர்டா நிலத்தை கையகப்படுத்தும் முனைப்புடன் செயல்பட்டு வரும் நிலையில் அதற்கு எதிராகவும் அர்டா சட்டப்போராட்டம் நடத்தி வருகிறது. கடந்த மே மாதம் சுற்றுச்சுவர் கட்டும் வேலை தொடங்கியது. இந்த நிலையில் அதிராம்பட்டினம் நகர்மன்ற துணைத்தலைவர் குணசேகரன், நகர்மன்ற தலைவரின் கணவர் MMS அப்துல் கரீம் உள்ளிட்டோர் சுற்றுச்சுவர் கட்டும் வேலையில் தடுத்ததாக ARDA புகாரளித்தது.

இந்த நிலையில், நேற்று அதிரை அர்டா நிலத்தில் நடைபெற்ற மருத்துவ முகாமில் கலந்துகொண்டு பொதுமக்கள் பயனடைந்தனர். இதற்காக கண்டெய்னர் மூலம் கிளினிக் அமைக்கப்பட்டு நுழைவு வளைவும் வைக்கப்பட்டு இருக்கிறது.



Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...