அதிரைக்கு "நோ".. முத்துப்பேட்டை "டபுள் ஓகே"! பாரபட்சம் காட்டும் ரயில்வே - இந்த லிஸ்டிலும் நமதூர் இல்லை

Editorial
0

தெற்கு ரயில்வே தற்போது புதிய ரயில் நிறுத்தங்களின் பட்டியலை வெளியிட்டு இருக்கிறது. அதன்படி சென்னை வழியாக அதிராம்பட்டினத்தில் நின்று செல்லும் செகந்திராபாத் - ராமநாதபுரம் ரயிலுக்கு முத்துப்பேட்டையில் நிறுத்தம் வழங்கி இருக்கிறார்கள்.

முத்துப்பேட்டை ரயில் பயணிகள் சங்கத்தினரின் முயற்சிக்கு வெற்றி கிடைத்து இருக்கிறது. ஆனால், ஏற்கனவே முத்துப்பேட்டையில் நின்று செல்லும் தாம்பரம் - செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயிலை அதிரையில் நிறுத்தக்கோரி தொடர்ந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. 

இது தொடர்பாக கடந்த வெள்ளிக்கிழமை அதிரை நல்வாழ்வு பேரவை சார்பில் ரயில் போராளி அஹமது அலி ஜாபர் தலைமையில் போராட்டமும் நடைபெற்றது. அதிரை ரயில் பயணிகள் சங்கத்தினரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகளை நேரில் சந்தித்து இதுபற்றி கோரிக்கை விடுத்தனர். தற்போது வெளியான பட்டியலிலும் தாம்பரம் - செங்கோட்டை ரயில் நிறுத்தத்தில் அதிராம்பட்டினம் இடம்பெறாதது மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...