அதிரை மாணவர்களின் மருத்துவ படிப்புக் கனவு.. அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு உள் ஒதுக்கீடு கிடைக்குமா?

Editorial
0
தமிழ்நாட்டில் உள்ள சுமார் 37,500 அரசுப் பள்ளிகளில் ஏறத்தாழ 46 லட்சம் மாணவர்களும் சுமார் 8, 300 அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் ஏறத்தாழ 22 இலட்சம் மாணவர்களும் பயின்று வருகின்றனர். இவர்கள் ஒன்றிய அரசு அறிமுகப்படுத்திய நீட் தேர்வால் மருத்துவம் படிக்கும் வாய்ப்பு பறிபோனது. 

இந்த நிலையில் கடந்த அதிமுக ஆட்சியில் மருத்துவத்திற்கான நீட் தேர்வு மற்றும் பொறியியல் படிப்புகளுக்கான நுழைவு தேர்வினால் வாய்ப்புகள் பறிக்கப்பட்ட ஏழை எளிய கிராமப்புற மாணவர்களின் நண்மைக்காக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு சிறப்பு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. 6ம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்த மாணவ மாணவிகள் இந்த இடஒதுக்கீட்டால் பயனடைந்து வருகிறார்கள்.

ஆனால், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் ஏழை, எளிய மாணவர்களுக்கு இந்த உள் ஒதுக்கீடு மறுக்கப்பட்டது. அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகைய அதில் சரிபாதி மாணவர்கள் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயில்கின்றனர். அரசு உதவிப்பெறும் பள்ளிகளிலும் ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களே அதிகம் பயில்கின்றனர்.

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் மேனிலை பள்ளி மாணவர்களுக்கும் இதனால் மருத்துவக் கலந்தாய்வில் இடஒதுக்கீடு கிடைப்பதில்லை. அதிராம்பட்டிபத்தில் வேறு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி இல்லை. பெண்களுக்கும் 10 ஆம் வகுப்பு வரையிலான பள்ளியே உள்ளது. இதனால் அதிரையில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு இடஒதுக்கீடு கிடைப்பது இல்லை.

இந்த சூழலில் தமிழ்நாடு அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் 2.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து எழுப்பப்பட்டு வந்தது. கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இது தொடர்பாக தமிழ்நாடு அமைச்சர்கள், அதிகாரிகள் கூட்டம் கூட்டப்பட்டு ஆலோசிக்கப்பட்டது. ஆனால் 2 ஆண்டுகளாகியும் அறிவிப்புகள் வெளியாகவில்லை.

அதிரை காதிர் முகைதீன் பள்ளி மாணவர்களின் மருத்துவப் படிப்பு கனவு நிறைவேறு அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு மருத்துவப் படிப்பில் 2.5% இடஒதுக்கீடு அல்லது அரசு பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டை 10% ஆக அதிகரித்து அதில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களையும் சேர்க்க வேண்டும் என அதிரை நகர திமுகவினரும், அனைத்துக் கட்சி பிரமுகர்களும் காதிர் முகைதீன் பள்ளி நிர்வாகமும் அதிரை பிறை சார்பாக வலியுறுத்துகிறோம்.


Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...