அதிரையில் ரூ.1000 மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்தீர்களா.. போன் காலை மிஸ் பண்ணாதீங்க

Editorial
0

பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. தமிழ்நாடு அரசு இந்த உரிமைத் தொகையை பெற தகுதியுடைய பெண்கள் யார், தகுதியற்ற பெண்கள் யார்  கடந்த ஜூலை மாதம் என அறிவித்தது.

அதன்படி கடந்த ஜூலை மாதம் இதற்கான முகாம் தொடங்கப்பட்டது. அந்த முகாம்களில் விண்ணப்பங்கள் மக்களுக்கு வழங்கப்பட்டு ஆகஸ்டு 4 ஆம் தேதி முதல் கட்ட முகாம் நிறைவு பெற்றது. அதன் மூலம் 80 லட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டு இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டன.

2 ஆம் கட்ட முகாம் ஆகஸ்டு 5 ஆம் தேதி தொடங்கப்பட்டு 18 ஆம் தேதி வரை நடைபெற்றது. 2 ஆம் கட்ட முகாமில் விண்ணப்பிக்காதவர்களுக்கு வாய்ப்பு வழங்கும் வகையில் ஆகஸ்டு 18 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை சிறப்பு முகாமை தமிழ்நாடு அரசு நடத்தியது. அதன் மூலமாக 1.63 கோடி விண்ணப்பங்கள் அரசுக்கு வந்துள்ளன.

சரியான தகவல்களை விண்ணப்பங்களில் மக்கள் வழங்கி இருக்கிறார்களா என்பதை விண்ணப்பதாரர்களின் வீட்டுக்கு சென்ற ஆய்வு செய்யப்படும் என அரசு அறிவித்தது. அதன்படி ஆய்வுப் பணிகள் நடைபெற்று  முதற்கட்ட பட்டியலும், அதன் தொடர்ச்சியாக இறுதிப் பட்டியல் தயார் செய்யப்படுகிறது. 

பல்வேறு பகுதிகளில் விண்ணப்பதாரர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். இது தொடர்பாக அதிரை நகராட்சி மன்ற ஊழியரிடம் நாம் விசாரித்தபோது விண்ணப்பத்தில் வழங்கப்பட்டு இருக்கும் எண்களுக்கு தொடர்புகொண்டு உறுதிபடுத்தப்போவதாக தெரிவித்தார். எனவே விண்ணப்பதாரர்கள் எந்த போன்கால்களையும், மெசேஜ்களையும் தவறவிடாதீர்கள்.








Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...