அதிரையில் ரயில் நிற்காவிட்டால் திருச்சியில் அடுத்த மாதம் உண்ணாவிரதம் - ரயில் போராளி ஜாபர் வார்னிங்

Editorial
0
தாம்பரம் - செங்கோட்டை (20683/84) ரயில்களுக்கு நம் ஊரில் நிறுத்தம் அறிவிக்கவும், கம்பன் எக்ஸ்பிரஸ் ரயிலை அதிரை வரை நீட்டிக்கவும், கூடுதல் ரயில் சேவைகளை அதிரை ரயில் நிலையத்திற்கு வழங்கவும் வலியுறுத்தி இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அதிரைக்கு ரயில் சேவை வழங்கக்கோரி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
இதில் திமுக நகர செயலாளர் குணசேகரன், அதிமுக நகர செயலாளர் பிச்சை, அதிமுக நகர துணை செயலாளர் அஹமது தமீம், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இந்திய கம்யூனிஸ்டு கட்சி பிரமுகர்கள் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர்.
இதில் பேசிய ரயில் போராளி அஹமது அலி ஜாபர் அவர்கள், "அதிராம்பட்டினத்தில் 3 எக்ஸ்பிரஸ் ரயில்களை நிறுத்தினால் போதும் என்றுதான் கேட்கிறோம். மீனவர்கள், சிறு வியாபாரிகள் பிழைப்பில் மண்ணை அள்ளி போட்டுவிடாதீர்கள். ரயில்வே அமைச்சர் அவர்களுக்கும், ரயில்வே அதிகாரிகளுக்கும்  ஒரு எச்சரிக்கை விடுக்கிறேன். இன்னும் ஒரு மாதம் கெடு விதிக்கிறோம். பழைய ரயில் வண்டிகளான கம்பன் எக்ஸ்பிரஸ், ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் அதிராம்பட்டினத்தில் நின்று போக வேண்டும். எங்களுக்கு இந்த வந்தே பாரத் எல்லாம் வேண்டாம். நாங்கள் கேட்கும் ரயில்கள் வராவிட்டால் அடுத்த மாதம் 1 ஆம் தேதி எந்த அறிவிப்பும் இன்றி யாருடைய சொல்லையும் கேட்காமல் திருச்சியில் அடுத்த மாதம் 1 ஆம் தேதி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவோம்." என்றார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...