அதிரை மக்களே! இனி அரசு ஆவணத்துக்கு பட்டுக்கோட்டை செல்லவேண்டாம்.. நமதூர் தாலுக்காவாக மெயில் அனுப்புங்க

Editorial
0


அதிரையை தாலுக்காவாக அறிவிக்க 
வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. அதிரை பிறை சார்பில் இதற்கான முயற்சியில் இறங்கி இருக்கிறோம்.

அதிரை தாலுக்காவாக அதிரை பிறையின் மெயில் அனுப்பும் திட்டத்தின் கீழ் சப்மிட் பட்டனை கிளிக் செய்து முதலமைச்சர், அமைச்சர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோருக்கு மெயில் அனுப்புங்கள்
நமதூருக்கு அலுவலகம் வந்தால் சாதிச் சான்றிதழ், வருவாய்ச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் மற்றும் வாரிசுச் சான்றிதழ், நில உடமைச் சான்றிதழ் போன்றவை, ரேசன் அட்டை தொடர்பான பணிகள், பட்டா, சிட்டா ஆவணங்கள் போன்றவற்றுக்காக பட்டுக்கோட்டை செல்லாமல் அதிரையிலேயே வேலையை முடிக்கலாம்.

முதியோர் உதவித்தொகை, ஆதரவற்றோர் உதவித் தொகை, விதவை உதவித்தொகை போன்ற பல்வேறு அரசு உதவித் தொகைகள், நலத்திட்ட உதவிகளை அதிரையிலேயே பெற முடியும். வட்டாட்சியர் நமதூரிலேயே இருந்தால் அரசு தொடர்பான பணிகள் அவரது நேரடி கண்காணிப்பில் நடக்கும். அவரை எளிதில் அணுகி தேவைகளை கேட்டு பெற முடியும். 

இதற்காக உள்ள முகவர்களை அணுகி கூடுதல் தொகையை வழங்க வேண்டிய தேவை இருக்காது. தற்போது அதிராம்பட்டினத்தில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் பட்டுக்கோட்டைக்கு இதற்காக செல்கிறார்கள். நமதூரிலேயே பெரும்பாலான அரசு சார்ந்த வேலைகள் முடியும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...