அதிரை மக்களின் வரியில் 3வது புது கார்.. நகராட்சியை கண்டித்து அதிமுக கவுன்சிலர் வெளிநடப்பு

Editorial
0
அதிராம்பட்டினம்: நகராட்சிக்கு மூன்றாவது கார் வாங்குவதை கண்டித்தும், கரிசல்மணி குளத்தில் பம்ப் மூலம் குளங்களுக்கு நீர் நிரப்பும் திட்டத்தை எதிர்த்தும் அதிமுக கவுன்சிலர் நான்சி பிச்சை கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார்.

அதிராம்பட்டினம் நகர்மன்ற கூட்டம் இன்று (வியாழன்) நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் நகராட்சி நிர்வாகம் சார்பில் கார் வாங்குவதை கண்டித்தும், கரிசல்மணி குளத்தில் பம்ப் மூலம் குளங்களுக்கு நீர் நிரப்பும் திட்டத்தை எதிர்த்தும் அதிமுக கவுன்சிலர் நான்சி பிச்சை வெளிநடப்பு செய்தார்.

இது தொடர்பாக அதிரை பிறையிடம் தொலைபேசி மூலம் அவர் பேசியதாவது, "அதிராம்பட்டினம் நகராட்சியாக அறிவிக்கப்பட்டு புதிய நிர்வாகம் அமைந்த பிறகு ரூ.35 லட்சம் செலவில் 2 கார்கள் மக்கள் வரிப் பணத்தில் வாங்கப்பட்டது. தமிழ்நாடு அரசால் வழங்கப்படவில்லை. இந்த நிலையில் தற்போது புதிதாக மூன்றாவது கார் வாங்க முடிவு செய்து உள்ளார்கள். 

மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கிறார்கள். இந்த ஆண்டுக்கான வரிப்பணம் தீர்ந்துவிட்டது. 2024 ஆம் ஆண்டுக்கான வரிப்பணத்தையும் முன் கூட்டியே வசூலித்து செலவு செய்துவிட்டார்கள். ஏன் மக்களின் வரிப்பணத்தை இப்படி வீண் செலவு செய்கிறார்கள்?
ஏற்கனவே ஏரியில் இருந்து பம்ப் மூலம் 9 ஆண்டுகளாக தண்ணீர் எடுத்து குளங்களுக்கு நீர் நிரப்பப்பட்டு வருகிறது. அதை காழ்ப்புணர்ச்சி காரணமாக தற்போது செயல்படுத்தாமல், கரிசல்மணி ஏரியில் பம்ப் போட்டு தண்ணீர் எடுக்க முயல்கிறார்கள். இப்படி மக்களின் வரிப்பணத்தை வீணடிப்பதற்கு பதில் வேறு நல்ல விசயங்களுக்கு பயன்படுத்தலாம்." என்றார். 

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...