அதிரை ரயில் நிலையம் அருகே நாளை ஆர்ப்பாட்டம் - ரயில் போராளி அஹமது அலி ஜாபர் அறிவிப்பு

Editorial
0
அதிராம்பட்டினத்திற்கு ரயில் சேவை மீண்டும் கிடைக்க முக்கிய காரணமானவரும், பல ஆண்டுகளாக ரயில்சேவைக்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருபவருமான அஹமது அலி ஜாபர் அவர்கள், தன்னுடைய அதிராம்பட்டினம் நல்வாழ்வு பேரவை என்ற அமைப்பு மூலமாக கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.

அதில், "நல்வாழ்வு பேரவை சார்பாக நம் ஊர்மக்களுக்கு தெரிவிப்பது என்னவென்றால் நம் ஊர் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை (20683/84) ரயில்களுக்கு நம் ஊரில் நிறுத்தம் இல்லாததால் மற்றும் இதுவரை நம்ஊர் வழியாக எர்ணாகுளம் செல்லும் வேளாங்கண்ணி - எர்ணாகுளம் (16361/62) ரயில்களுக்கு அடுத்தமாதம் முதல் நிறுத்தம் மறுக்கப்பட்டதாலும், கீழ்காணும் தீர்மானம் அதிராம்பட்டினம் நல்வாழ்வு பேரவை சார்பாக எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆதரவாக வணிகர்கள், நண்பர்கள், இளைஞர்கள் கல்லூரி மாணவ, மாணவிகள், தொழிலாளர் பெருமக்கள், மீனவர்கள், அரசியல் கட்சிகள், பொதுநல அமைப்புகள் அனைவரும் தவறாது கலந்துகொள்ள வேண்டியது. இதுவரை நடந்த ரயில் போராட்டங்கள் மற்றும் ரயில் மறியல்களில் விடுத்த கோரிக்கைகளுக்கு மாண்புமிகு தென்னக ரயில்வே பொது மேலாளர் சென்னை மற்றும் திருச்சி தென்னகரயில்வே கோட்ட மேலாளர் DRM இதுவரை உரிய நடவடிக்கை எடுக்காததினால் வரும் 01.09.2023 வெள்ளிக்கிழமை மதியம் 1.00 மணிக்கு அதிராம்பட்டினம் ரயில் நிலையம் முன்பு மாபெரும் அறவழி ஆர்ப்பாட்டம் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் மூலம் தென்னக ரயில்வே துறைக்கு நம்முடைய கண்டனத்தை எடுத்துக் காட்ட வேண்டியது. அதிராம்பட்டினம் மற்றும் அதனை சுற்றி உள்ள ஊர்களை சேர்ந்த அனைவரும் ஆர்ப்பாட்டத்தில் தவறாது கலந்து நம் அனைவரின் எதிர்ப்பையும் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்." என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் எர்ணாகுளம் ரயில் அதிரையில் நின்று செல்லும் என அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில் அந்த அமைப்பு சார்பில் மற்றொரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில், "அஸ்ஸலாமு அலைக்கும். 
எதிர்வரும் 01/09/2023 வெள்ளிக்கிழமை பகல் 1:30 மணி முதல் 2:00 மணி வரை நமதூரின் பன்னெடுங்கால தொடர்வண்டி தேவைகள் மற்றும் நிறுத்தங்களின் அவசியத்தை வலியுறுத்தி எல்லா தரப்பு பொது மக்கள், இயக்கங்கள், கட்சிகள் சார்பாக அதிராம்பட்டினம் தொடர்வண்டி நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த அனைவரும் வருகை தந்து நமதூரின் அவசியத்தேவையை உணர்ந்து ஒத்துழைப்புத் தருமாறு கேட்டுக்கொள்கிறார்கள்." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...