அதிரை மக்களே.. அடுத்த பவர் கட்டுக்கு ரெடியா? முழு நாள் மின் தடை அறிவிப்பு

Editorial
0
அதிராம்பட்டினம்: மாதாந்திர மின் பராமரிப்பு பணிகளுக்காக வேண்டி புதன் கிழமை மின் தடை செய்யப்படும் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து மதுக்கூர் மின் வாரிய உதவி செயற்பொறியாளர் விடுத்துள்ள அறிவிப்பில், "எதிர்வரும் 23.08.2023 (புதன்) அன்று மதுக்கூர் 110/33-11KV துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்வதை முன்னிட்டு காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மதுக்கூர் நகர், கன்னியாக்குறிச்சி, காடத்தங்குடி, அத்தியெட்டி, முத்தாக்குறிச்சி, பெரியகோட்டை, தாமரங்கோட்டை அதிராம்பட்டிணம், முத்துப்பேட்டை மற்றும் அதனை சார்ந்த பகுதிகளுக்கும் மின்விநியோகம் இருக்காது." என்று தெரித்துள்ளார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...