அதிரைக்கு கோப்பையுடன் திரும்பிய AFFA.. மேலநத்தம் கால்பந்து தொடரில் 2 வது பரிசு

Editorial
0

திருவாரூர் மாவட்டம் மேலநத்தத்தில் கால்பந்தாட்ட தொடர் போட்டி நடைபெற்றது. பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த முன்னணி அணியினர் கலந்துகொண்டு விளையாடினர். நேற்று நடைபெற்ற இதன் அரையிறுதி போட்டியில் 
அதிரை AFFA அணி பொதக்குடி அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றிப்பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியது.


இன்று நடந்த இறுதிப்போட்டியில் AFFA அணியை தஞ்சை அத்லடிக் புல்ஸ் அணி 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றிபெற்றது. இப்போட்டியை காண மேலநத்தம் சென்ற அதிரை கால்பந்து ரசிகர்கள் இதனால் ஏமாற்றம் அடைந்தாலும், இறுதிப்போட்டி வரை சிறப்பாக விளையாடி முன்னேறிய AFFA அணியினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...