அதிரையில் மத நல்லிணக்கம்.. ஆதரவற்ற 92 வயது மூதாட்டி உடலை இந்து முறைப்படி அடக்கம் செய்த SDPI

Editorial
0
அதிரை: இறந்த இந்து மத மூதாட்டியின் உடலை இந்து முறைப்படி  அடக்கம் செய்த அதிரை SDPI கட்சியினர்.

இன்று அதிகாலை 3.30 மணியளவில் சுரைக்காகொல்லையில் உள்ள இல்லத்தில் செல்லம்மாள் (வயது 92) என்ற ஆதரவற்ற மூதாட்டி உயிரிழந்தார். அவரது உடலை அவரது பேத்தி கார்த்திகா என்பவர் அடக்கம் செய்து தர அதிரை SDPI கட்சியின் நிர்வாகிகளிடம் மனு கொடுத்தார்.
அதன் பேரில் SDPI கட்சியின் நகர துணைச்செயலாளர் C.அஹமது தலைமையில்,  SDPI கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் N.M. ஷேக் தாவூத், மாவட்ட செயற்குழு உறுப்பினர் S.அஹமது அஸ்லம், SDTU தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் A.முஹம்மது யூசுப், நகர செயலாளர் A. ரஜபு முகைதீன்,  சமூக ஆர்வலர் S.M சாகுல் ஹமீது மற்றும் கட்சி செயல்வீரர்கள் மூதாட்டி செல்லம்மாள் உடலை அவரது வீட்டில் இருந்து SDPI கட்சியின் மதுக்கூர் ஆம்புலன்ஸ் மூலம் வண்டிப்பேட்டை அருகில் உள்ள அடக்கஸ்தலத்தில் இந்து மத முறைப்படி  நல்லடக்கம் செய்தனர்.
இந்த சம்பவம் மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக அமைந்தது. உடலை நல்லடக்கம் செய்த SDPI கட்சியினருக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர். 

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...