அதிரை ரயில் பயணிகள் படும் அவதி.. இங்க நிறுத்துனா எங்க இறங்குறது? ரயிலை விட பிளாட்பார்ம் சின்னது

Editorial
0
அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் செகந்திராபாத் இராமநாதபுரம் விரைவு இரயிலின் பெட்டிகள் நடைமேடைக்கு வெளியே நிற்கிறது. இதனால் இரயில் பெட்டியில் இருந்து முதியோர் மாற்றுத்திறனாளிகள் கர்ப்பிணி பெண்கள் குழந்தைகள் இறங்க மிகவும் சிரமப்படுகிறார்கள்
பயணிகள் இறங்கும் இடத்தில் கருவேலங்காடுகள் வளர்ந்து உள்ளன. இரவு நேரத்தில் பாம்பு நட்டுவாக்கிளி தேள் போன்ற விஷப் பிராணிகளால் இரயில் பிராணிகளுக்கு ஆபத்து ஏற்படலாம்.
மேலும் இந்த இடம் திறந்த வெளி கழிப்பிடம் போல் இருப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. எனவே இரயில்வே நிர்வாகம் அதிக பெட்டிகளுடன் இயங்கும் விரைவுவண்டி இரயில் பெட்டிகள் நடைமேடையில் நிற்குமாறு அதிராம்பட்டினம் இரயில் நிலைய நடைமேடையின் நீளத்தை அதிகரிக்க வேண்டும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...