அதிரைக்கு தெற்கு ரயில்வே கொடுத்த 2வது லட்டு.. 3 நாட்கள் சென்று வரும் கேரளா சிறப்பு ரயில்

Editorial
0
அதிராம்பட்டினம் வழியாக திருநெல்வேலி - தாம்பரம் (06004) சிறப்பு விரைவு ரயிலை தொடர்ந்து எர்ணாகுளம் - வேளாங்கண்ணி - எர்ணாகுளம் (வண்டி எண் 06039/06040) இயக்கப்பட உள்ளன.

வேளாங்கண்ணி திருத்தல திருவிழா மற்றும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு எர்ணாகுளம் - வேளாங்கண்ணி - எர்ணாகுளம் சிறப்பு கட்டண விரைவு ரயில் (வண்டி எண் 06039/06040 )சிறப்பு கட்டண விரைவு ரயில் 28.08.2023, 04.09.2023 ,11.09.2023 திங்கள்கிழமை மதியம் 1:10 மணிக்கு எர்ணாகுளத்தில் இருந்து புறப்பட்டு செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை, காரைக்குடி, அறந்தாங்கி வழியாக பேராவூரணிக்கு செவ்வாய்க்கிழமை அதிகாலை 01.48 மணிக்கும் பட்டுக்கோட்டைக்கு அதிகாலை 02 .10 மணிக்கும் அதிராம்பட்டினத்திற்கு அதிகாலை 02.27 மணிக்கும் வந்தடைந்து தொடர்ந்து திருத்துறைப்பூண்டி, திருவாரூர், நாகப்பட்டினம் வழியாக வேளாங்கண்ணியை செவ்வாய் கிழமை காலை 05.40 மணிக்கு 
அடையும்.

மீண்டும் இந்த வேளாங்கண்ணி- எர்ணாகுளம் விரைவு வரையில் (வண்டி எண்06040 ) , 29.08.2023, 05.09.2023, 12.09.2023 செவ்வாய்க்கிழமைகளில் மாலை 6:40 மணிக்கு வேளாங்கண்ணியில் புறப்பட்டு இதே தடத்தின் வழியாக  அதிராம்பட்டினத்திற்கு செவ்வாய்க்கிழமை இரவு 09.09 மணிக்கும் பட்டுக்கோட்டைக்கு இரவு 09.25 மணிக்கும் பேராவூரணிக்கு  இரவு அ9.48 மணிக்கும் வந்தடைந்து தொடர்ந்து எர்ணாகுளத்திற்கு புதன் கிழமை அதிகாலை 11.40 க்கு வந்தடையும்.

மேற்கண்ட சிறப்பு ரயில்களை இப்பகுதியில் உள்ள ரயில் பயணிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமாய் பட்டுக்கோட்டை வட்ட ரயில் பயணிகள் நல சங்கத்தினர் அதிராம்பட்டினம் இரயில் பயணிகள் நல சங்கத்தினர் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...