அதிரை சிஸ்யா மூலமாக மட்டும் பொதுசிவில் சட்டத்தை எதிர்த்து 67,200 மெயில்கள் - நன்றி அறிவிப்பு

Editorial
0
அதிரை சிஸ்யா மூலமாக மட்டும் பொதுசிவில் சட்டத்துக்கு எதிராக 67,000 மெயில்கள் அனுப்பப்பட்டன.

இதுகுறித்து சிஸ்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "ஒன்றிய அரசு கொண்டு வரும் பொது சிவில் சட்டம் தொடர்பாக பொது மக்கள் மற்றும் பதிவு செய்யப்பட்ட மத அமைப்புகளிடம் இருந்து மத்திய சட்ட ஆணையம் கருத்து கேட்டு, ஜூலை 14 க்குள் அனுப்ப கால அவகாசம் விதித்து பின்னர் அதை ஜூலை 28 ஆம் தேதி வரை நீட்டித்தது.

இது தொடர்பாக நமது ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் இளைஞர் அமைப்பு சார்பில் ஒரு கிளிக்கில் பொது சிவில் சட்டத்துக்கு எதிராக மெயில் அனுப்பும் வசதி கடந்த ஜூலை 2 ஆம் தேதி தொடங்கப்பட்டது.

அதிரை பிறை இணையதளம் மற்றும் அனைத்து மசூதிகளிலும் இதற்கு கியூ ஆர் கோடு மூலம் எதிர்ப்பு தெரிவிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. 

இதன் மூலமாக மட்டும் பல்வேறு ஊர்கள், மதங்களை சேர்ந்த 67,200 பேர் இச்சட்டத்துக்கு எதிராக மெயில் செய்துள்ளார்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். இது நமதூர் மக்கள் தொகையை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு காரணமாக அமைந்த ஷம்சுல் இஸ்லாம் சங்க இளைஞர் அமைப்பு நிர்வாகிகள், ஊடகங்கள், நல விரும்பிகள், முஹல்லா வாசிகள், அதிரை மக்கள், வெளியூர்களில் முகாம்களை நடத்தியவர்கள் அனைவருக்கும் நன்றி." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...