அந்த வகையில் இந்த ஆண்டு ரமலானை முன்னிட்டு இன்று 60 குடும்பங்களுக்கு ரமலான் + பெருநாள் சிறப்பு தொகுப்பை சிட்னி அணி வழங்கி உள்ளது. ஒரு கிலோ கோழி, காய்கறி, ஒரு கிலோ அரிசி, சீனி, பருப்பு வகைகள், தேயிலை மற்றும் மளிகை பொருட்கள், பெருநாள் பசியாறுதல் உணவுக்கு தேவையான மைதா, ரவா, கடற்பாசி, முந்திரி, திராட்சை போன்ற ₹1,400 மதிப்பிலான பொருட்கள் வழங்கப்பட்டது.
நேற்று 60 குடும்பங்களுக்கு உதவி செய்ததுபோக மீதம் இருந்த தொகையில் மேலும் 4 ரமலான் + பெருநாள் தொகுப்புகள் வாங்கப்பட்டு 4 குடும்பங்களுக்கு இன்று விநியோகித்து உள்ளனர். இதன் மூலம் 64 குடும்பத்தினருக்கு இந்த உதவியை அவர்கள் செய்துள்ளனர்.
0 Comments