அதிரைக்கு பெரும் இழப்பு.. யார் இந்த கம்பியூட்டர் ஃபாரூக்?

Editorial
0
அதிரை காலியார் தெருவை சேர்ந்தவர் பாருக் (கம்பியூட்டர் பாருக்) அவர்கள் இன்று வஃபாத்தாகிவிட்டார்கள். அன்னாரின் ஜனாசா நாளை நல்லடக்கம் செய்யப்பட இருக்கும் நிலையில், பலரும் அவரது அரசியல் செயல்பாடுகளை அறிந்திருக்க வாய்ப்பில்லை. அது குறித்து விரிவாக பார்ப்போம்.

கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் கம்பியூட்டர் பாரூக் அவர்களிடம் அதிரை பிறை சார்பில் நேர்காணல் எடுத்து அவரது செயல்பாடுகளை வெளியிட்டு இருந்தோம். அப்போது வெளியிட்ட தகவல் பின்வருமாறு..
அதிரையில் பல வருடங்களாக அரசியல் தலைவர்களுக்கு பொருளாதாரம் மற்றும் அரசியல் சம்மந்தமான ஆலோசனைகளை வழங்கி வருகிறார் கம்பியூட்டர் பாரூக். இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் உள்துறை அமைச்சர்கள் சுஷில் குமார் ஷின்டே, ப.சிதம்பரம், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, குலாம் நபி ஆசாத் போன்ற தலைவர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார்.

அதேபோல் முன்னாள் மத்திய அமைச்சரும் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவருமான ஜி.கே.வாசன், தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் ஞானதீசிகன், கே.வி.தங்கபாலு காங்கிரஸ் மூத்த தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போன்ற தமிழக அரசியல் பிரமுகர்களுக்கும் இவர் தன்னுடைய அரசியல் மற்றும் பொருளாதார நுணுக்கங்களைப் பற்றிய ஆலோசனைகளை பல ஆண்டுகளாம கடிதம், ஈமெயில்.மூலம் அனுப்பி வந்துள்ளார்.

இதை படித்து பார்த்த தலைவர்களும் இவருக்கு பதில் கடிதம் அளித்துள்ளனர். மன்மோகன் சிங், ப.சிதம்பரம் ஆகியோருக்கு ரயில்வே தொடர்பாக கடிதம் மூலம் தான் வழங்கிய ஆலோசனை நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது என அவர் தெரிவித்தார்

மன்மோகன் சிங், ப.சிதம்பரம், காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி ராகுல் காந்தி ஆகியோருக்கு இந்திய பொருளாதாரம் குறித்து பல முறை ஆலோசனை கடிதங்களை எழுதியுள்ளார். குறிப்பாக 1990 ம் ஆண்டு முதல் ரயில்வே நிர்வாகத்துக்கு சிறந்த ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.

அதேபோல் தங்கம் விலை உயர்வு, இலங்கை தமிழர் பிரச்சனை, ஆசிட் வீச்சு, பாஸ்போர்ட், காமென்வெல்த் மாநாடு தொடர்பான பல ஆலோசனைகளை தேசிய தலைவர்களுக்கு கடிதம் மூலம் இவர் அனுப்பி வந்துள்ளார்.

அதேபோல் கடந்த 2013 முதல் கம்பியூட்டர் பாரூக் கொஞ்சம் கொஞ்சமாக 26 பக்கங்களில் அரசியல், ஆன்மீகம் பொருளாதாரம் பற்றி நோட்டீஸ் வெளியிட்டுள்ளார். இப்படி பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய கம்பியூட்டர் ஃபாரூக் அவர்களின் மறைவு அதிரைக்கே பேரிழப்பாகும். அன்னாரின் குடும்பத்தினருக்கு பொறுமை உண்டாகட்டும். 

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...