ஹிமாச்சலில் வீழ்ந்த பாஜக.. அதிரையில் பட்டாசு வெடித்து காங்கிரஸ் கொண்டாட்டம்

Editorial
0
இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று எண்ணப்பட்டு நிறைவடைந்தது. இதில் காங்கிரஸ் 40 இடங்களிலும், பாஜக 25 இடங்களிலும், சுயேச்சைகள் 3 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர். இதன் மூலம் அங்கு ஆட்சியை காங்கிரஸிடம் பறிகொடுத்துள்ளது பாஜக.

இதனை நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள். அந்த வகையில் அதிரை காங்கிரஸ் கட்சி சார்பில் அதன் நகர தலைவர் தமீம் அன்சாரி தலைமையில் அக்கட்சியினர் பேருந்து நிலையம் அருகே பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.
இதுகுறித்து தமீம் அன்சாரி வெளியிட்ட பதிவில், "மூழ்கிய தாமரை.. குஜராத்தை மட்டும் வென்றுவிட்டு.. மற்ற 6 மாநிலங்களில் அடி வாங்கிய பாஜக! அப்போ 2024?

குஜராத் சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றிபெற்று இருந்தாலும் மற்ற 6 மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தல், இடைத்தேர்தல், மாநகராட்சி தேர்தல்களில் பாஜக படுதோல்வி அடைந்து உள்ளது. தமிழிசை சௌந்தரராஜன் சொல்வது போல இதை வெற்றிகரமான தோல்வி என்றுதான் சொல்ல வேண்டும்!
இமாச்சல பிரதேச தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. இமாச்சல பிரதேசத்தில் கடந்த நவம்பர் 12ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்றது. 68 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. அங்கு மெஜாரிட்டி பெற 35 இடங்களில் வெற்றிபெற வேண்டும். இந்த நிலையில் இமாச்சல பிரதேசத்தில் தற்போது காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது. 

40 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. கடந்த சட்டசபை தேர்தலில் அங்கு காங்கிரஸ் 21 இடங்களை மட்டுமே வென்று இருந்த நிலையில் இந்த முறை 40 இடங்களை பெற்று வெற்றிபெறும் நிலையில் உள்ளது. மாறாக பாஜக 25 இடங்களுக்கு சுருங்கி உள்ளது. ஆம் ஆத்மி ஒரு இடத்தில் கூட முன்னிலை பெறவில்லை.

இந்திய அரசியலில் இந்த வெற்றியானது பாஜக சரிவின் தொடக்கம் 
என 2024க்கு காங்கிரசை  வெற்றிப் பாதைக்கு கொண்டுச்சென்று ஆட்சி கட்டிலில் அமரவைக்கும் என  காங்கிரசார் உற்ச்சாகமாக  வெடிகள் வெடித்தும்  இனிப்புகள் வழங்கியும் இந்தியா முழுவதும் கொண்டாடி வருகின்றனர். 
நன்றி!"

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...