அதிரையில் சாக்கடையான சி.எம்.பி. வாய்க்கால்.. பராமரிப்பு பணி தொடர்பாக மக்களிடம் எம்.எல்.ஏ. கருத்துக்கேட்பு கூட்டம்

Editorial
0
அதிரை CMP வாய்க்கால் பராமரிப்பு தொடர்பாக அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற உள்ளது.

இது குறித்து, பட்டுக்கோட்டை எம்.எல்.ஏ. அண்ணாதுரை கீழ்காவிரி வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளர் முருகேசன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, "நீர்வளத்துறையின் பராமரிப்பில் உள்ள கல்லணைக் கால்வாயில் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் உதவியுடன் நீட்டித்தல், புனரமைத்தல் மற்றும் நவீனபடுத்துதல் திட்டத்தின் கீழ் மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த பணிகள் தஞ்சை மாவட்டம் கல்லணையிலிருந்து தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்தின் தொடர்ச்சியாக பட்டுக்கோட்டை அருகே உள்ள ராஜாமடம் கிளைக் கால்வாய் அதன் கிளை வாய்க்கால்கள் மற்றும் ஏரிகள் புனரமைக்கப்படுகின்றன.

இது குறித்து தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா அதிராம்பட்டினத்தில் உள்ள சம்சுல் இஸ்லாமிய சங்க அரங்கில் பொதுமக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் நாளை (சனிக்கிழமை) காலை 10.30 மணிக்கு நடை பெறுகிறது.

இந்த கூட்டத்திற்கு கீழ்காவிரி வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளர் முருகேசன் மற்றும் பட்டுக்கோட்டை தொகுதி எம்.எல்.ஏ. அண்ணாதுரை ஆகியோர் தலைமையில் நீர்வளத்துறை பொறியாளர்கள் கலந்து கொள்கிறார்கள். 

எனவே பொதுமக்கள் அனைவரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்." என்று குறிப்பிட்டு உள்ளார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...