அதிரையில் மழைக்கு மத்தியில் நடந்து முடிந்த ESC கைப்பந்து தொடர்.. சிவகங்கை அணி சாம்பியன்

Editorial
0
அதிரை ஈஸ்டர்ன் ஸ்போர்ட்ஸ் கிளப் (ESC) சார்பில் 12 ஆம் ஆண்டு மாபெரும் மின்னொளி கைப்பந்து தொடர் போட்டி நேற்று காட்டுப்பள்ளிவாசல் மைதானத்தில் தொடங்கியது. பல ஊர்களை சேர்ந்த அணிகள் பங்கேற்ற இந்த தொடர் அதிரையில் விடாமல் பெய்த மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டு நேற்று தொடங்கப்பட்டது. 
இதில் அதிரை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அணிகள் கலந்துகொண்டன. பரபரப்பாக நடைபெற்ற இந்த தொடரில் சிவகங்கை ஜாலி பாய்ஸ் அணியினர் மற்றும் நாகப்பட்டினம் அணியினர் இறுதிப்போட்டிக்கு முன்னேறினர்.
இதில் சிவகங்கை அணி வெற்றிபெற்று முதல் பரிசை வென்றது. நாகப்பட்டினம் அணி 2 வது பரிசையும், தமிழண்ணை ஸ்போர்ட்ஸ் கிளப் பேய்கரம்பயன்கோட்டை அணி 3 வது பரிசையும், அதிரை ESC 4 வது பரிசையும் வென்றது.

மழை நெருக்கடிகளுக்கு மத்தியில் இந்த போட்டியை ESC அணியினர் சிறப்பாக செய்திருந்தனர்.

முதல் பரிசு (₹20,000) - சிவகங்கை
2வது பரிசு (₹15,000) - நாகப்பட்டினம்
3வது பரிசு (₹12,000) - பேய்கரம்பயன்கோட்டை
4வது பரிசு (₹10,000) - அதிரை ESC

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...