அதிரையில் சிறப்பாக தொடங்கிய SISYAவின் கோடைகால பயிற்சி முகாம் - உற்சாகமாக பங்கேற்ற மாணவர்கள்

Editorial
0


பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்களின் நேரங்களை பயனுள்ளதாகவும் ஆக்கப்பூர்வமாகவும் மாற்ற ஷம்சுல் இஸ்லாம் சங்க இளைஞர் அமைப்பு சார்பில் இன்று கோடைகால பயிற்சி முகாம் தொடங்கப்பட்டு இருக்கிறது.
ஜுன் 06 ஆம் தேதி வரை நடைநடைபெற இருக்கும் 6ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவர்களுக்கான இந்த பயிற்சி முகாமில் 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.
விளம்பரம்: 
 

இதில் மாணவர்களுக்கான மார்க்க வகுப்பு, கணித வகுப்பு, விளையாட்டு வகுப்புகளுக்கான அறிமுகம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மாணவர்களும் தங்களுக்கு தெரிந்த கலைகள், துறைகள், விளையாட்டுக்கள் குறித்து பேசினார்கள். சிலர் சிலம்பம், கராத்தே போன்றவற்றை மேடையில் செய்து காட்டினார்கள். கிராஅத் மற்றும் பைத் ஓதினர். 
நாளை முதல் மாணவர்கள் உரிய நேரத்துக்கு வகுப்புக்கு வருமாறும், பேனா, நோட் போன்றவற்றை எடுத்து வருமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். இதில் கலந்துகொண்ட மாணவர்கள் தேனீர், சம்சா, வடை வழங்கப்பட்டது.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...