அதிராம்பட்டினம் நகராட்சி ஆணையர் சென்னை தலைமைச் செயலகத்திற்கு இடமாற்றம் வழியனுப்பி வைத்த அதிரை நகராட்சி தலைவர், துணைத் தலைவர் மற்றும் கவுன்சிலர்கள்
அதிராம்பட்டினம் நகராட்சியாக அறிவிக்கப்பட்டவுடன் புதிய ஆணையராக பொறுப்பேற்ற சசிக்குமார் மீண்டும் சென்னை தலைமைச் செயலகத்திற்கே பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளார். இன்றுடன் அதிரையிலும் விடை பெறும் வரும் அவரின் பணியை பாராட்டி இன்று அதிராம்பட்டினம் நகராட்சி அலுவலகத்தில் வழியனுப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சியில் அதிராம்பட்டினம் நகராட்சித் தலைவர் எம்.எம்.எஸ்.தாஹிரா அம்மாள் அப்துல் கரீம், துணைத்தலைவர் இராம குணசேகரன் மற்றும் திமுக உறுப்பினர்கள், திமுக கவுன்சிலர்கள் நகராட்சி ஆணையருக்கு பொன்னாடை போர்த்தி, அவரது சேவையை பாராட்டி தலைமைச் செயலகத்தில் அவர்கள் பணி சிறக்க வாழ்த்துக் கூறி வழியனுப்பி வைத்தனர்.
0 Comments