அதிரை கனரா வங்கி ஏ.டி.எம்-இல் தமிழ் புறக்கணிப்பு - இந்தி இருக்கு!

Editorial
0
அண்மை காலமாகவே ஒன்றிய அரசு நிறுவனங்களில் பிராந்திய மொழிகள் புறக்கணிக்கப்பட்டு இந்தியை திணிக்கும் வேலைகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக மக்கள் அதிகம் புழங்கும் பொதுத்துறை வங்கிகள், தபால் நிலையங்களில் இதுபோன்ற பிரச்சனைகள் அதிகம் இருப்பதால் தாய் மொழி மட்டுமே தெரிந்த பாமர மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2016 ஆம் ஆண்டு அறிவித்த பண மதிப்பிழப்பு என்ற மோசமான அறிவிப்பால் பொதுமக்கள் அனைவரும் வங்கிக் கணக்கு தொடங்க டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் ஈடுபட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. இதனால், ஒவ்வொரு இந்தியனும் ஏ.டி.எம் மையங்களில் பணம் எடுக்க வேண்டியது அத்தியாவசியமாகிவிட்டது.

விளம்பரம்:ஆனால், அதை அனைவரும் பயன்படுத்த பிராந்திய மொழிகளை சேர்ப்பது அவசியம். பெரும்பாலான வங்கி ஏ.டி.எம்-களில் இது இணைக்கப்பட்டாலும் ஆங்காங்கே சில ஏ.டி.எம். மையங்களில் பிராந்திய மொழிகள் புறக்கணிக்கப்பட்டு ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மொழிகள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. 

அந்த வகையில் அதிரை ஈ.சி.ஆர். சாலையில் கனரா வங்கி ஏ.டி.எம். மையத்தில் 2 இயந்திரங்கள் இருந்தாலும் அதில் ஒன்று மட்டுமே பெரும்பாலும் இயங்குகிறது. அவ்வாறு பயன்படுத்தப்படும் அந்த இயந்திரத்திலும் தமிழ் சேர்க்கப்படவில்லை. அதற்கு பதிலாக ஆங்கிலத்துடன் இந்தி சேர்க்கப்பட்டுள்ளது.
இதனால் ஆங்கிலம், இந்தி அறியாத பாமர மக்கள், தொழிலாளர்கள், மீனவர்கள் ஏ.டி.எம். இல் பணம் எடுக்க முடியாமல் அங்கு வரும் மற்ற வாடிக்கையாளர்களின் உதவியை நாடுகின்றனர். அப்போது அவர்கள் ஏமாற்றப்படுவதற்கும் வாய்ப்புகள் அதிகம். எனவே, அதிரை கனரா வங்கி ஏ.டி.எம்.இல் தமிழை இணைக்க வேண்டும் என்பது அனைத்து தரப்பு மக்களின் வேண்டுகோளாக உள்ளது.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...